Thursday, June 18, 2009

ஆங்கிலம் துணுக்குகள் 08 (Verb Forms)

இன்றைய ஆங்கிலம் துணுக்குகள் பகுதியில் ஒரு வினைச்சொல் ஆங்கில மொழியில் எத்தனை வடிவங்களாகப் பயன்படுகின்றன என்பதைப் பார்ப்போம்.

ஐந்து வடிவங்களாகப் பயன்படுகின்றன. அவைகளாவன:

1. Base Form
2. Gerund Form
3. Third Person Form
4. Past Form
5. Participle Form

எடுத்துக்காட்டு:

"do" எனும் ஒரு வினைச்சொல்லை எடுத்துக்கொண்டோமானால், அது do, doing, does, did, done என ஐந்து வினை வடிவங்களாகப் பயன்படுவதைப் பார்க்கலாம். இவ்வாறு ஆங்கில வினைச் சொற்கள் அனைத்தும் ஐந்து வினை வடிவங்களாக பயன்படுகின்றன.

மேலும் சில எடுத்துக்காட்டாக இந்த அட்டவணையைப் பாருங்கள்.
FormsVerbs
Base Formdogospeakplay
Gerund Formdoinggoingspeakingplaying
Third Person Formdoesgoesspeaksplays
Past Formdidwentspokeplayed
Participle Formdonegonespokenplayed

1. இதில் "Base Form" என்பது ஆதாரமான அடிப்படை வினைச்சொற்களாகும்.

2. "Gerund Form" என்பது base form சொற்களுடன் "ing" யும் இணைந்து பயன்படுபவைகள்.

3. "Third Person Form" என்பது சாதாரண நிகழ்கால வினைச்சொற்கள், மூன்றாம் நபர் ஒருமை பயன்பாடாகப் பயன்படுபவைகள். அதாவது "Base Form" உடன் "s, es" போன்ற எழுத்துக்கள் இணைந்து பயன்படும். இவற்றை அட்டவணை Third Person Singular (He, She, It: infinitive + e/es) பார்க்கலாம்.

4. "Past Form" இவை ஆங்கிலத்தின் இறந்தக்கால வடிவமாகும். இது "Regular Verbs" களின் போது "ed" எனும் எழுத்துக்கள் இணைந்து பயன்படும். ஆனால் "Irregular Verbs" களின் போது ஒரு ஒழுங்கு முறையற்று காணப்படும். இவற்றை நீங்கள் அட்டவணை (Irregular verbs) இல் பார்க்கலாம்.

5. "Participle Form" இவைகளும் Past Form போன்றே "Regular Verbs" களின் போது "ed" எனும் எழுத்துக்கள் இணைந்து பயன்படும் என்றாலும், Irregular Verbs களின் போது வேறுப்பட்டு காணப்படும். இவற்றையும் நீங்கள் அட்டவணை (Irregular Verbs) இல் பார்த்து பயிற்சி செய்துக்கொள்ளலாம்.

இவ்வாறு ஆங்கிலத்தில் மொத்தம் ஐந்து வினைச்சொல் வடிவங்கள் உள்ளன.

மேலும் சிலதுணுக்குகள்.

நன்றி

அன்புடன் அருண் HK Arun

Tuesday, June 16, 2009

ஆங்கில உச்சரிப்புப் பயிற்சி (Pronunciations)

ஆங்கில மொழி கற்கும் நாம், ஆங்கிலம் பேசும் பொழுது ஆங்கில உச்சரிப்புக்கள் சரியாக உச்சரிக்கப்பட வேண்டும் எனும் எதிர்ப்பார்ப்பு பொதுவாக அனைவரிடமும் காணப் படுகின்றது. அதற்கு ஆங்கில சொற்களின் ஒலிப்பைத் துல்லியமாக கற்பிப்போரைப் பின்பற்றியே பயிலவேண்டும்.

ஆங்கில மொழி கல்வி கூடங்களில் ஆரம்பக் கல்வி முதலே உச்சரிப்பு பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தே கற்பிக்கப் படுகின்றது. சிலவேளை உங்களில் யாரேனும் ஆங்கில இலக்கணம் கற்றும், சரியான ஆங்கில உச்சரிப்பைப் பெறமுடியாதுப் போயிருந்தால் அதற்கானக் காரணம், நீங்கள் ஆங்கிலம் கற்ற கல்வி கூடங்களும், உங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களுமே ஆகும்.

இவ்வாறு ஆங்கில மொழியை ஒலிப்புத் துல்லியத்துடன் பேசமுடியாதவர்கள் அல்லது பேசவிரும்புவோர் இதோ இந்த இணைப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஒவ்வொரு சொல்லையும் எவ்வாறு உச்சரிக்கவேண்டும், ஒலிப்புக்களின் போது ஏற்ற இறக்கங்கள் எவ்வாறு அமையவேண்டும் என்பதனையும் இக்காணொளிகள் தெளிவாக்குகின்றன.

உதட்டசைவு
பல்லசைவு
தாடையசைவு
நாக்கசைவு
முகத்தசைகளின் அசைவு

என ஒவ்வொன்றின் அசைவுகளுடன் ஒவ்வொரு சொல்லும் எவ்வாறு உச்சரிக்கப்பட வேண்டும் என அழகாக உச்சரித்துக்காட்டப்படுகின்றது.

இக்காணொளியைப் பாருங்கள்



இந்தக் காணொளியை ஒரு எடுத்துக்காட்டிற்காகவே இங்கு இட்டுள்ளேன். இதுப்போன்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சொற்களை Daily Pronunciation என ஆங்கில உச்சரிப்புக்களை இத்தளத்தில் பயிற்றுவிக்கின்றனர். A-Z ஆங்கில அகரவரிசையில் சொற்களை நீங்கள் பயிற்சி செய்துப் பழகலாம்.

விவாதங்களும் வேண்டுகோளும்

தமிழர்களான நாம் இந்தியர் பேசுவதுதான் சரியான ஆங்கில உச்சரிப்பு என்றும், இலங்கையர் பேசுவதுதான் சரியான ஆங்கில உச்சரிப்பு என்றும் ஆங்காங்கே சில விவாதங்கள் இணையத்தில் காணப்படுகின்றது.

தமிழர்களான நம்மிடையே, தமிழகத் தமிழர்களில் பலருக்கு ல, ள ஒலிப்புகளை துல்லியமாக ஒலிக்க முடிவதில்லை. ஈழத்தமிழர்கள் பலருக்கு “ழ” ஒலிப்பு வருவதில்லை எனும் விவாதங்களும் உள்ளன. இதில் யார் பேசுவது சரியென்று நான் கருத்தாட வரவில்லை.

டகர ஒற்று எப்பொழுதும் வல்லினம். அதனை retroflex T ஆகத்தான் ஒலித்தல் வேண்டும். ஒவ்வொருவரும் தமிழை இப்படித் திரித்துக்கொண்டே போனால், தமிழ் ஒலிப்பு குட்டிசுவராகிவிடும்.

தமிழ் ஒலிப்பொழுக்கம் நிறைந்த மொழி. இடத்துக்கு இடம் மாறான ஒலிப்புகள் (சீர் இல்லாமல்) வருவது கிடையாது. ஆங்கிலத்தில் அப்படி இல்லை.

பயிலும் மாணவ/மாணவிகளும் எழுதுவதிலும் படிப்பதிலும் தேர்ந்துவிடுகின்றனர். ஆயினும் பேச்சுத் தமிழில் தடுமாறவே செய்கின்றனர்.

தமிழ் நடை, தமிழ்நாட்டிலேயே ஒருமுறை சீரழிந்து மணிப்பவளம் பெருகி, இப்பொழுது மீண்டும் இருபதாம் நூற்றாண்டில் உயிர்பெற்று வந்திருக்கிறோம். மீண்டும் ஒருமுறை அது அழிய வேண்டாம். நம் வீட்டை நாம் காப்பாற்றாமல், இன்னொருவரா காப்பாற்றுவார்?

இதுப்போன்ற தமிழ்பற்றாலர்களின் அங்கலாய்ப்புகளும், தமிழ்மொழி வல்லுநர்கள் இடையேயான கருத்து முறன்பாடுகளும் நிறையவே இருக்கின்றன. இன்னும் கூறப்போனால் சரியான தமிழ் ஒலிப்புத் துல்லியம் என்பது ஒரு சில தமிழ்மொழி வல்லுனர்கள், முனைவர்கள், கவிஞர்கள் என ஒரு வரையரைக்குள்ளேயே இருப்பதாகவே நான் உணர்கின்றேன். இவை இன்னும் எத்தனை தலைமுறைக்கு இப்படியே தொடர்ப்போகின்றது என்பதே பிரதானக் கேள்வியாகும்.

இவ்வாறான நிலையில் எம் தாய் மொழியான, தமிழ் மொழியையே நாம் சரியாக உச்சரிக்கின்றோமா? எமது தமிழ் ஒலிப்பில் ஒருமித்த ஒரு பொதுக்கருத்து நிலவுகின்றதா? என்பது தொடர்பில் பலக்கேள்விகள் எனக்குள்ளன.

அதற்கு என்ன செய்யலாம்?

உலகெங்கும் பரந்து வாழ் தமிழறிஞர்கள் தமிழ் ஒலிப்பு முறைகளில் முக்கிய கவனம் செலுத்தவேண்டும். அத்துடன் ஆரம்ப பாடசாலை முதல், தமிழ் உச்சரிப்புக்கள் தொடர்பில் ஒருமித்ததும் சரியானதுமான பயிற்சிமுறைகளை முன்வைக்க வேண்டும். தமிழ் மென்பொருளாலர்கள் அதற்கான மென்பொருள்களை உருவாக்கலாம்.

மேலே ஆங்கில சொற்களின் உச்சரிப்புக்கள் தொடர்பான இணையத்தளத்தைப் போன்று, தமிழ் சொற்களில் உச்சரிப்பதற்கு கடினமான ல, ள, ழ வேறுப்பாடுகளை, ன, ண, வேறுப்பாடுகளை, ர, ற வேறுப்பாடுகளை துல்லியமாக எல்லோரும் பெறுவதற்கான உச்சரிப்பு பயிற்சி முறைகளை உருவாக்கப்படவேண்டும். தமிழ் மொழி பாடசாலைகளில் ஆரம்பக் கல்வி முதலே அது நடைமுறைக்கு வரவேண்டும். சம்பந்தப்பட்டோர் இதற்கான முயற்சிகளில் இறங்கினால் அனைத்து தமிழர்களும் பயனடையலாம்.

குறைந்தப் பட்சம் தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொன்றினதும் ஒலிப்புத் துல்லியம் பெறுவதற்கான "உச்சரிப்பு பயிற்சி" காணொளி கோப்புக்களையாவது உருவாக்கி பதிவேற்ற வேண்டும் என வேண்டுகின்றேன்.

எதிர்ப்பார்ப்புகளுடன்.

அன்புடன் அருண் HK Arun

Tuesday, May 26, 2009

மனித உடல் உறுப்புகள் (Parts of the human body)

மனித உடம்பில் இருக்கும் உறுப்புகளுக்கான ஆங்கிலச் சொற்கள் அநேகமாக பலரும் அறிந்தவைகளாகவே இருக்கும். அதில் சில உறுப்புகளின் பெயர்கள் சிலருக்கு தெரியாமலும் இருக்கலாம், புதிதாக தெரிந்துக்கொள்ள விரும்புகின்றவர்களும் இருக்கலாம். அதனால் இன்றையப் பாடத்தில் மனித உடலின் உறுப்புகளின் பெயர்களை தமிழ் விளக்கத்துடன் கற்போம்.

சரியான உச்சரிப்பு பயிற்சியை பெற்றுக்கொள்ள விரும்புகின்றவர்கள் கீழே இணைக்கப்பட்டிருக்கும் ஒலிக் கோப்பினை சொடுக்கி பயிற்சிப் பெறலாம்.

Aangilam. Body par...

படங்களை பெரிதாக பார்க்க விரும்புகின்றவர்கள் படங்களின் மேல் சொடுக்கிப் பார்க்கலாம்.


No:Englishதமிழ்
1Headதலை
2Eyesகண்கள்
3Earsகாதுகள்
4Cheekகன்னம்
5Noseமூக்கு
6Mouthவாய்
7Neckகழுத்து
8Nippleமுலைக்காம்பு
8AShoulderதோள்/புயம்
9Chestமார்பு/நெஞ்சு
9ARibவிலா (எலும்பு)
10Breastமார்பு (பெண்)
11Armகை
12Elbowமுழங்கை
13Abdomenவயிறு
14Umblicus/Bellybuttonதொப்புள்/நாபி
15Groinsகவட்டி
16Wristமணிக்கட்டு
17Palmஉள்ளங்கை
18Fingersவிரல்கள்
19Vegina/Vulvaயோனி/புணர்புழை
20Penisஆண்குறி
20ATesticleவிரை
21Thighதொடை
22Kneeமுழங்கால்
23Calfகெண்டைக்கால்
24Legகால்
25Ankleகணுக்கால்
26Footபாதம்
27Toesகால் விரல்கள்


No:Englishதமிழ்
28Wristமணிக்கட்டு
29Palmஉள்ளங்கை
30Thumbகட்டைவிரல்
31Little Fingerசுண்டுவிரல்
32Ring Fingerமோதிரவிரல்
33Middle Fingerநடுவிரல்
34Index Fingerசுட்டுவிரல்
35Kneeமுழங்கால்
36Calfகெண்டைக்கால்
37Legகால்
38Lowerlegகீழ்கால்
39Ankleகணுக்கால்
40Toesகால் விரல்கள்
41Toenailsகால்(விரல்) நகங்கள்
42Footபாதம்
43heelகுதிகால்
44Fistகைமுட்டி (மூடியக்கை)
45Nailநகம்
46Knuckleவிரல் மூட்டு
47Muscleதசை
48Skinதோல்
49Hairமுடி
50Foreheadநெற்றி
51Eyebrowகண் புருவம்
52Eyelashகண் இரப்பை மயிர்
52AEyelidகண் இரப்பை/இமை
53Eyeballகண்மணி
54Noseமூக்கு/நாசி
55Nostrilமூக்கு/நாசித்துவாரம்
56Faceமுகம்
57Chinமுகவாய்க் கட்டை
58Adam's appleகுரல்வளை முடிச்சு (ஆண்)
59Mustacheமீசை
60Beardதாடி
61Lipஉதடு
62Uvulaஉள்நாக்கு
63Throatதொண்டை
64Molarsகடைவாய் பல்
65Premolarsமுன்கடைவாய் பல்
66Canineகோரை/நொறுக்குப் பல்
67incisorsவெட்டுப் பல்
68Gumபல் ஈறு
69Tongueநாக்கு

மேலே படங்களில் குறிக்கப்படாத சில உடல் உறுப்புகளின் பெயர்கள் கீழே இடப்பட்டுள்ளன.

No:Englishதமிழ்
70Bellyவயிறு (குழிவானப் பகுதி)
71Backமுதுகு
72Backboneமுதுகெலும்பு
73Rib boneவிலாவெலும்பு
74Buttockகுண்டி/ புட்டம்
75Anus/assholeகுதம்
76Skullகபாலம்/மண்டையோடு
77Muscularதசை
78Nerveநரம்பு
79Endocrineசுரப்பி
80Hipஇடுப்பு
81Lungநுரையீரல்
82Heartஇதயம்
83Kidneyசிறுநீரகம்
84Brainமூளை

இப் பெயர்கள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எமது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக் கொள்ளலாம்.

நன்றி

அன்புடன் அருண் HK Arun

...

...