ஆங்கில பாடப் பயிற்சி 25 (Grammar Patterns 7)

இதுவரை Grammar Patterns -1 றின் இலக்கவரிசைப் படி ஒவ்வொரு வாக்கியத்தையும் விரிவாகப் பார்த்து வருகின்றோம். அதன்படி கடந்தப் பாடத்தில் 26 வதாக வாக்கியத்தை விரிவாகப் பார்த்தோம். இன்று விரிவாகப் பார்க்க வேண்டியது 27 வது வாக்கியத்தையாகும். ஆனால் இன்று அவ்வாக்கியத்தை விரிவாகப் பார்க்கப்போவதில்லை. காரணம் இந்த 27 வது வாக்கியம் Perfect Tense வாக்கியமாகும்.

அவ்வாக்கியத்தை விரிவாகக் கற்பதற்கு முன்; அவ்வாக்கியத்துடன் தொடர்புடைய கிரமர் பெட்டனை (Grammar Patterns of Perfect Tense) பொருத்தம் கருதி இன்று வழங்குகின்றோம்.

நாம் ஏற்கெனவே கற்ற கிரமர் பெட்டன்களைப் போன்று இதனையும் (வாய்ப்பாடு பாடமாக்குவதைப் போல்) மனனம் செய்துக்கொள்ளும் படி கேட்டுக்கொள்கின்றோம். மனனம் செய்துக் கொண்டீர்களானால் பயிற்சிகளைத் தொடர்வது மிக எளிதாக இருக்கும். 

1.  I have done a job. (Present Perfect)
நான் செய்திருக்கிறேன் ஒரு வேலை.

2. I have just done a job.
நான் (இப்பொழுதுதான்) செய்திருக்கிறேன் ஒரு வேலை.

3. I had done a job. (Past Perfect)
நான் செய்திருந்தேன் ஒரு வேலை.

4. I had done a job long ago.
நான் செய்திருந்தேன் ஒரு வேலை (வெகுக்காலத்திற்கு) முன்பே.

5. I wish I had done a job.
எவ்வளவு நல்லது நான் செய்திருந்தால் ஒரு வேலை.

6. I will have done a job. (Future Perfect)
நான் செய்திருப்பேன் ஒரு வேலை.

7. I have been doing a job. (Present Perfect Continuous)
நான் கிட்டடியிலிருந்து/சிலகாலமாக செய்துக்கொண்டிருக்கிறேன் ஒரு வேலை.

8. I had been doing a job. (Past Perfect Continuous)
நான் அன்றிலிருந்து/அக்காலத்திலிருந்து செய்துக்கொண்டிருந்தேன் ஒரு வேலை.

9. I will have been doing a job. (Future Perfect Continuous)
(குறிப்பிட்டக் காலம் வரை) நான் செய்துக்கொண்டிருப்பேன் ஒரு வேலை.

10. He may have done a job.
அவன் செய்திருந்திருக்கலாம் ஒரு வேலை.

11. He might have done a job.
அவன் செய்திருந்திருக்கலாம் ஒரு வேலை.

12. He must have done a job.
அவன் நிச்சயம் செய்திருந்திருக்க வேண்டும் ஒரு வேலை.

13. He would have done a job.
அவன் செய்திருந்திருக்க வேண்டும் ஒரு வேலை.

14. He could have done a job.
அவன் செய்திருந்திருக்க இருந்தது ஒரு வேலை.

15. He should have done a job.
அவன் செய்திருந்திருக்கவே இருந்தது ஒரு வேலை.

16. He shouldn’t have done a job. (should + not)
அவன் செய்திருந்திருக்கவே வேண்டியதில்லை ஒரு வேலை.
அவன் அநியாயம் செய்திருந்தது ஒரு வேலை. (போன்றும் பொருள் கொள்ளலாம்/பேசலாம்)

17. He needn’t have done a job. (need + not)
அவன் செய்திருந்திருக்க (அவசியமில்லை) வேண்டியதில்லை ஒரு வேலை.

18. He seems to have done a job.
அவன் செய்திருப்பான் போல் தெரிகின்றது ஒரு வேலை.

19. Having done a job I have got experience.
செய்யப்பட்டிருந்தால் ஒரு வேலை நான் பெற்றிருப்பேன் அனுபவம்.

பயிற்சி

கீழே 10 வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை மேலே நாம் கற்றதைப் போன்று ஒவ்வொரு வாக்கியத்தையும், 19 வாக்கியங்களாக மாற்றி எழுதி பயிற்சி செய்யவும். எழுதும் பொழுது வாசித்து வாசித்து எழுதவும். வாசித்து வாசித்து எழுதுவதால் அவை கூடிய விரைவில் உங்கள் மனதில் பதிந்து விடும். அதுவே ஆங்கிலம் எளிதாக கற்பதற்கான இரகசியம்.

1. I have done - நான் செய்திருக்கிறேன்.
2. I have written - நான் எழுதியிருக்கிறேன்.
3. I have chosen - நான் தெரிவுசெய்திருக்கிறேன்.
4. I have worked - நான் வேலைசெய்திருக்கிறேன்.
5. I have watched. - நான் பார்த்திருக்கிறேன்.
6. He has spoken - அவன் பேசியிருக்கிறான்.
7. He has started. - அவன் ஆரம்பித்திருக்கிறான்.
8. She has cooked. - அவள் சமைத்திருக்கிறாள்.
9. She has visited - அவள் போயிருக்கிறாள்.
10. She has walked - அவள் நடந்திருக்கிறாள்.

கவனிக்கவும்

இந்த "Perfect Tense" வாக்கியங்களில் பிரதான வினைச்சொல் எப்பொழுதும் "Past Participle" சொல்லாகவே இருக்கும் என்பதை மறவாதீர்கள். மேலும் சொற்களின் வேறுப்பாட்டை "Irregular verbs" அட்டவணையைப் பார்த்து அறிந்துக்கொள்ளலாம்.

மின்னஞ்சல் கேள்விகள்

எமக்கு கிடைக்கப் பெற்ற மின்னஞ்சல் கேள்விகளில் அதிகமானவை “Perfect Tense” தொடர்பானதாகவே இருந்தது. அதனாலேயே இவற்றை பிரத்தியேகமான ஒரு பாடமாக வழங்குகின்றோம்.

உதாரணம்: நீ அமெரிக்காவுக்கு போயிருக்கிறாயா? என ஒருவர் உங்களிடம் கேள்வி கேட்டால் “ஆம்” என்றோ “இல்லை” என்றோ சுருக்கமாக பதிலளிக்கலாம். ஆனால் “ஆம், நான் பலமுறை அமெரிக்காவுக்கு போயிருக்கிறேன்.” என்று கூற வேண்டுமானால் அப்பதிலை “Present Perfect Tense” வாக்கியத்திலேயே பதிலளிக்க வேண்டியதாக இருக்கும்.

எடுத்துக்காட்டு:

I have visited.
நான் போயிருக்கிறேன்.

I have visited America several times.
நான் போயிருக்கிறேன் அமெரிக்காவுக்கு பல தடவைகள்/பல முறை.

(குறிப்பு: இவ்வாக்கியத்தை போகிறேன், போகின்றேன், போனேன் என்பதுப் போல் குழப்பிக்கொள்ள வேண்டாம்)

மேலும் இப்பாடத்தில் உள்ள ஒவ்வொரு வாக்கியங்களும் ஒவ்வொரு பாடங்களாக விரிவடையும். அப்போது அவ் வாக்கியங்கள் பற்றி மேலும் விரிவாகக் கற்றுக்கொள்ளலாம்.

இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எமது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புகொள்ளலாம்.

நன்றி
ஆங்கிலம்.ப்ளொக்,   ஆங்கிலம்.கொம்,  ஆங்கிலம்.காம்

அன்புடன் ஆசிரியர் அருண் HK Arun Download As PDF

30 comments:

தமிழ் அமுதன் said...

வணக்கம் திரு,அருண் உங்கள் ஆங்கில பயிற்சி தரும் வலைத்தளத்தை
இன்றுதான் கண்டேன் மிகவும் பயனுள்ளதளம். உங்கள் சேவைக்கு
வாழ்த்துக்கள்! விகடன் குட் பிளாக்கில் பார்த்து உங்கள் வலைத்தளத்தை
அறிந்து கொண்டேன்.

நன்றி! எனது வலைதளத்தில் இதற்கான இணைப்பை கொடுத்துள்ளேன்.

HK Arun said...

வணக்கம் ஜீவன்.

உங்கள் கருத்துக்கும் இணைப்புக்கும் மிக்க நன்றி.

விகடன் குட் பிளாக்கில் எமது தளத்தை இணைத்த விகடன் நிறுவனத்தினருக்கும் நன்றி.

Anonymous said...

ஜுனூன் ரேஞ்சுக்கு தமிழ் படுத்துரிங்க சார் ... உண்மையிலே சொல்றேன் முதல்ல இயல்பு தமிழில் எப்படி வாக்கியம் அமைப்பது என்று கற்றுக் கொள்ளுங்கள் ..
உதாரணம் : "நான் செய்திருக்கிறேன் ஒரு வேலை" என்பதில் நீங்கள் அமைத்த ஆங்கில வாக்கியத்தின் சொற்களை வரிசை மாறாமல் அப்படியே மொழி பெயர்த்திருக்கிறீர்கள் ...எனக்குத் தெரிந்து அப்படியே செய்வது சரியல்ல ..."நான் ஒரு வேலை செய்திருக்கிறேன் " ... "நான் இப்பொழுது தான் ஒரு வேலையை செய்திருக்கிறேன்" ..."வெகு காலத்திற்கு முன்பே நான் ஒரு வேலை செய்திருந்தேன்" ..."முன்பே ஒரு வேலை செய்திருக்க வேண்டியது" ...
தயவு செய்து தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் ...உங்கள் பணி மேலும் சிறப்பாக தொடர என் வாழ்த்துக்கள். ;-)

Sathik Ali said...

அழகாக ஆங்கிலம் கற்றுக்கொடுக்கிறீர்கள்.நல்ல சேவை.வாழ்த்துக்கள்.எனது வலைதளத்தில் உங்கள் பதிவுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன்.

HK Arun said...

"இயல்பு தமிழ்" என்பது சிலருக்கு தூயத்தமிழ், சிலருக்கு வடமொழி கலந்தத் தமிழ், இன்னும் சிலருக்கோ ஆங்கிலம் கலந்தத் தமிங்கிலத் தமிழ்.

//ஜுனூன் ரேஞ்சுக்கு// இதுப் போன்ற ஆங்கில இடைசெருகல் முறையைத் தான் "இயல்பு தமிழ்" என்கிறீர்களா?

இயல்பு தமிழ், தமிழ் கலைச்சொல் உருவாக்கம் என்பது தமிழுக்கு சிறப்பு தான். ஆனால் ஆங்கில மொழியை எளிதாகக் கற்பதற்கு, முதலில் ஆங்கில நடைக்கு ஏற்ப தமிழ் படுத்தி கற்பதே, அதன் பொருள் விளங்கிக் கற்பதற்கு இலகுவாக இருக்கும் என நாம் கருதுகின்றோம்.

தவிர என்னை ஆங்கில மோகம் கொண்டவனாகக் கருத வேண்டாம். நான் என் தாய் மொழிக்கே முன்னுரிமை கொடுப்பவன். இங்கே இப்பாடங்களை கற்க விரும்பும் எவரும் எளிதாக விளங்கி கற்க வேண்டும் என்பதனையே நோக்க மாகக் கொண்டுள்ளோம்.

எமது “HE Institute” இல் ஆங்கில நடைக்கு ஏற்ப தமிழ் படுத்திக் கற்பிக்கும் முறையை முதன் முதல் அறிமுகப்படுத்தி்யப் பொழுது இவ்வாறான பல கேள்விகள் எழுந்தன,பின் கேள்வி எழுப்பியோரா லாயே இம்முறை கற்பதற்கு எளிதாக இருக்கின்றது என ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதனையே நாம் இங்கே தொடர்கின்றோம்.

I have done
நான் செய்திருக்கிறேன்.
I have done a job.
நான் செய்திருக்கிறேன் + ஒரு + வேலை +

என ஆங்கில வாக்கியங்களை நீட்டு அமைப்பதற்கு இவ்வாறான கற்பித்தல் முறை எவருக்கும் எளிதாக விளங்கக் கூடியது. இன்னும் ஒவ்வொரு சொல்லுக்குமான பொருளையும் சரியாகப் விளங்கிக்கொள்ளலாம். பொருள் விளங்கி கற்றப் பின் அவரவர் அவரவரது பேச்சு வழக்கிற்கு ஏற்ப பேசுவது எளிது.

//தயவு செய்து தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்//

நிச்சயமாக அவ்வாறு எடுத்துக்கொள்ளவில்லை. இவ்வாறான கேள்விகள் இந்த “ஆங்கிலம்” தளம் ஆரம்பித்தக் காலத்திலும் வந்திருந்தது.

மேலும் விளக்கங்களுக்கு http://aangilam.blogspot.com/2008/01/hk.html இவ்வாக்கத்தைப் பார்க்கவும்.

நன்றி

கிளியனூர் இஸ்மத் said...

நல்லமுயற்சி வாழ்த்துக்கள்

-கிளியனூர் இஸ்மத்

Unknown said...

Arun Sir

Can I Ask Tamil Question.
You tell English Answer

But I Dont Know use tamil Fonts

Please Tell me

Unknown said...

மிக்க பயனுள்ள ஆக்கங்கள். நன்றிகள்.

Unknown said...

மிக்க பயனுள்ள ஆக்கங்கள். நன்றிகள்.

Anonymous said...

pdf vadivamaga koduthal migavum payan ullathaga irrukum

ashok

E Quality said...

thank you for your blogs. It is very use full for tamils.
Already put your blog in my web list. wishes to continue..
kind request write some current english words and tamil meanings oneside(TRANSLATIONS) always.
example genoside===inappadukolai
state of terror=arasa payangaravaatham..etc..
thank you again
kugan

Mohamed Haneef said...

Thanks for your afford

hamaragana said...

அன்பு நண்பரே எனக்கு வயது 55 அங்கிலம் அவள்ளவாக வராது ஆனால் இன்று உங்கள் தளத்தை பார்த்த பின்பு நானும் ஆங்கிலம் பேச முடிஉம் என்ற நம்பிக்கை . நன்றி நண்பரே


parantal guidence can achive your target

Unknown said...

respected sir,
i am kumaravel 25
years old . thanks for your tamil to english grammer thank you very much
take care 9884658178
by
kumaravel

tamil-inimai.blogger.com said...

வணக்கம் திரு.அருண் உங்கள் இந்த பகுதி மிகவும் பயன் உள்ளதாக உள்ளது
எனது சிறிய வேண்டுகோள் நிங்கள் இங்கு தொகுத்து உள்ள அனைத்தையும் ஒரே pdf file ஆக தொகுத்து வழங்கினால் அது மேலும் பயன் தரும்
நன்றி விரைவில் எனது வலைதளத்தில் இந்த தளத்தின் இணைப்பை இணைத்து கொள்கிறேன்

Unknown said...

வணக்கம் திரு,அருண் உங்கள் ஆங்கில பயிற்சி தரும் வலைத்தளத்தை
இன்றுதான் கண்டேன் மிகவும் பயனுள்ளதளம். உங்கள் சேவைக்கு
வாழ்த்துக்கள்

Unknown said...

வணக்கம் திரு.அருண்
உங்கள் ஆங்கில பயிற்சி
இன்றுதான் கண்டேன் மிகவும் பயனுள்ளதளம்.
உங்கள் ஆங்கில தமிழ் சேவை தொடர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி

aaryan said...

pls tell me exact meaning of could have done and would have done

balaji said...

no words to express...i could say one thing that everyone now can speak in english fluently..
thank u for this try..

Unknown said...

you done a good job we are really usefull your job thank u somuch

Unknown said...

thanks

Veera said...

Mr Arun ........

Thank U very much sir... Ur blog is really good.... I am an electronics engineer...... after my degree i faced lot of problem due to english....Now, I think little bit better before that..... because of u.....
Please try to share this all Tamil Medium schools also........Because our school staff are (99.9999%) are dont have this much explanation...... Thats why 99% tamil students are getting struggle in degree courses.... They dont understand the english language.. They dont get the concept clearly....their lifes are spoiled....Please think about how to reach school students..... And Thanks Once again....

Regards
Veeramuthu Natarajan

Azhagar said...

sir I've dought in this sentence" Having done a job I have got experience.". how to use "having"

Unknown said...

this web side was very useful for me, thank to you.

நற்றுணையாவது நமச்சிவாயவே said...

13. He would have done a job.
அவன் செய்திருந்திருக்க வேண்டும் ஒரு வேலை.

14. He could have done a job.
அவன் செய்திருந்திருக்க இருந்தது ஒரு வேலை.

15. He should have done a job.
அவன் செய்திருந்திருக்கவே இருந்தது ஒரு வேலை

sir itha normal tamil la change panni sollungga ,purinchika kastama irukku

Sankari Mani said...

வணக்கம் அருண். உங்களது ஆங்கிலப்பயிற்சி எ ல்லா வயதினரும் புரிந்து கொள்ளுமாறு இருக்கின்றது. வாழ்த்துக்கள்

RAMESH said...

Thank you Arun.

Unknown said...

can you please transilate some sentences with present Participle,past participle and GERUND .

Unknown said...

Superb

Unknown said...


எனக்கு has been ,have been ,been,had been use செய்வது எப்படி என்று தெரியவில்லை. Please help me and What is difference between has been and has ? Where to use has and has been ? I have big confusion.........

Post a Comment