Friday, September 19, 2008

பழங்கள் (List of Fruits)

பழ வகைகளின் பெயர்களை ஆங்கிலத்தில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல பழங்களின் தமிழ் பெயர்கள் தெரியாததால்/இல்லாததால் ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளேன். அப்பெயருக்குரிய பழங்கள் எது என்று தெரியாவிட்டால் அப்பெயரை சொடுக்கி பழத்தின் நிழல் படத்தைப் பார்த்து அறிந்துக்கொள்ளுங்கள்.

இப்பழங்களின் பெயர்களுக்கான சரியான உச்சரிப்புக்களைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் கீழே இணைக்கப்பட்டிருக்கும் ஒலிக்கோப்பினைச் சொடுக்கி பயிற்சிப் பெறலாம்.
List of Fruits.mp3
இலஆங்கிலம்தமிழ்
1Appleகுமளிப்பழம், சீமையிலந்தப்பழம்
2Ambarella அம்பிரலங்காய்
3Annona சீத்தாப்பழம்
4Annona muricata முற்சீத்தாப்பழம்
5Apricot சர்க்கரைப்பாதாமி
6Avocado வெண்ணைப்பழம்/ஆனைக்கொய்யா
7Banana வாழைப்பழம்
8Batoko Plum லொவிப்பழம்
9Bell fruit பஞ்சலிப்பழம், ஜம்பு
10Bilberry அவுரிநெல்லி
11Blackberry மேற்கத்திய நாவற்பழம்
12Black currant கறுந்திராட்சை
13Blueberry ஒரு வகை நெல்லி
14Bread fruit கொட்டைப்பலா, சீமைப்பலா
15Butter fruitஆனைக்கொய்யா
16Cantaloupe மஞ்சல் நிற முலாம்பழம்
17Cashew fruitமுந்திரிப்பழம், கஜு
18Cherimoya சீத்தாப்பழம்
19Cherry சேலாப்பழம்
20Chickoo சீமையிலுப்பை
21Citron கடார நாரந்தை
22Citrus aurantium கிச்சலிப்பழம்
23Citrus reticulata கமலாப்பழம்
24Citrus sinensis சாத்துக்கொடி
25Clementine நாரந்தை
26Cocoa fruit கொகோப்பழம்
27Cranberry குருதிநெல்லி
28Cucumber வெள்ளரிப்பழம்
29Custard apple சீத்தாப்பழம்
30Damson ஒரு வித நாவல் நிறப்பழம்
31Date fruit பேரீச்சம் பழம்
32Devilfig பேயத்தி
33Dragon fruit ட்றொகன் பழம்
34Duku டுக்கு
35Durian முள்நாரிப்பழம், தூரியன்
36Emblica நெல்லி
37Eugenia rubicunda சிறு நாவற்பழம்
38Feijoi/Pinealle guava புளிக்கொய்யா
39Fig அத்திப்பழம்
40Persimmon fruit சீமை பனிச்சம்பழம்
41Gooseberry கூஸ்பெறி
42Grapefruitபம்பரமாசு
43Grapes கொடி முந்திரி, திராட்சை
44Guava கொய்யாப்பழம்
45Honeydew melon தேன் முழாம்பழம்
46Huckle berry(ஒரு வித) நெல்லி
47Jack fruit பலாப்பழம்
48Jumbu fruit ஜம்புப் பழம்
49Jamun fruit நாகப்பழம்
50Kiwi fruit பசலிப்பழம்
51Kumquat (பாலைப்பழம் போன்ற ஒருப்பழம்)
52Kundang மஞ்சல் நிற சிறிய பழம்
53Lansium லன்சியம்
54Lemon வர்க்கப்பழம்
55Lime எழுமிச்சை
56Loganberry லோகன் பெறி
57Longan கடுகுடாப் பழம்
58Louvi fruit லொவிப்பழம்
59Lychee லைச்சி
60Mandarin மண்டரின் நாரந்தை
61Mango மாம்பழம்
62Mangosteenமெங்கூஸ் பழம்
63Melon இன்னீர்ப் பழம், முழாம்பழம்
64Morus macroura மசுக்குட்டிப்பழம்
65Mulberry முசுக்கட்டைப் பழம்
66Muscat grape திராட்சை
67Orange தோடம்பழம்
68Palm fruitபனம் பழம்
69Papaya பப்பாப் பழம்
70Passion fruit கொடித்தோடை
71Peach குழிப்பேரி
72Pear பேரி, பெயார்ஸ்
73Pine apple அன்னாசிப் பழம்
74Plum ஆல்பக்கோடா
75Pomegranateமாதுளம் பழம், மாதுளை
76Pomelo பம்பரமாசு
77Pulasan (ஒரு வகை)றம்புட்டான்
78Quinceசீமை மாதுளம்பழம்
79Rambutan றம்புட்டான்
80Rasberry புற்றுப்பழம்
81Red banana செவ்வாழைப் பழம்
82Red Currant ஒரு வித லொவி
83Sapodilla சீமையிலுப்பை
84Satsuma நாரத்தை
85Sour sop/ Guanabana அன்னமுன்னா பழம்
86Strawberry செம்புற்றுப்பழம்
87Syzygium ஜம்புப்பழம்
88Tamarillo குறுந்தக்காளி
89Tamarind புளியம்பழம்
90Tangerine தேன் நாரந்தை
91Tomato தக்காளிப்பழம்
92Ugli fruit முரட்டுத் தோடை
93Water melon வத்தகைப்பழம், குமட்டிப்பழம், தர்பூசணி
94Wax jumbu நீர்குமளிப்பழம்
95Resberry இளஞ்செம்புற்றுப் பழம்
96Woodappleவிளாம்பழம்

குறிப்பு:

ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் எல்லாப் பழங்களின் பெயர்களுக்கும் தமிழில் பெயர் இல்லை. அதற்காக நாம் கவலைப்பட வேண்டியதும் இல்லை என்றே நினைக்கின்றேன். காரணம் உலகில் வெவ்வேறு தேசங்களில் அந்நாட்டு தற்ப வெப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப உற்பத்தியாகும் பழங்களின் பெயர்கள் அநேகமானவை அவை உற்பத்தியாகும் நாடுகளில் வழங்கப்பட்டப் பெயர்களாலேயே எல்லோராலும் அறியப்படுகின்றது/அழைக்கப்படுகின்றது.

உதாரணமாக:

Lychee - லைச்சி (இது சீனாவில் அதிகமாகக் காணப்படும் ஒரு விதப்பழம். சீன மொழியிலான " Lychee" எனும் பெயரே இன்று உலகளாவிய ரீதியாகப் புழக்கத்தில் உள்ளது. இன்னுமொரு பழம் "Mandarin" இது சில அடிகள் மட்டுமே வளரும் சிறிய மரத்தில் தோன்றும் ஒரு வித நாரந்தம் பழம். சீன மண்டரின் மக்களின் பெருநாள் காலத்தில் (இம்மரத்தின் காய்கள் பழுக்கும் காலம்) அப் பழங்களோடு மரத்தை வீடுகளில், கட்டிடங்களில் அழகுக்கு வைப்பது அவர்கள் மரபு. இதனால் இப்பழத்தின் பெயர் "Mandarin" என்றே பொதுவாக எல்லோராலும் அழைக்கப்படுகின்றது.

தமிழில் எமது மொழிப் பெயரான "மாங்காய்" என்பதையல்லோ "Mango" என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படுகின்றது.

எனவே உலகில் உள்ள எல்லா வகையானப் பழங்களது பெயர்களையும் தமிழ் படுத்துதல் அவசியமான ஒன்றாகத் தோன்றவில்லை. அப்படியே தமிழ் படுத்தினாலும் அது அனைத்து தமிழ் சமுகத்தையும் சென்றடையுமா? என்பது இன்னுமொரு கேள்வியாகும். "Apple" எனும் பழத்திற்கு தமிழில் குமளிப்பழம், சீமையிலந்தம்பழம், அரத்திப்பழம் என்றெல்லாம் தமிழ் படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பயன்பாட்டில் "ஆப்பிள்" எனும் சொல்தான் அனைவரதும் புழக்கத்தில் இருக்கிறது.

இருப்பினும் புழக்கத்தில் வேற்று மொழி சொற்களை நாம் பயன்படுத்தினாலும், அவற்றிற்கான தமிழ் கலைச்சொற்கள் இருக்குமாயின் அவற்றை தமிழர்களான நாம் அறிந்து வைத்துக்கொள்ளுதல் அவசியமானதாகும். இவ்வலைத்தளத்தில் எழுதப்பட்டிருக்கும் பழங்களின் பெயர்களுக்கான தமிழ் கலைச்சொற்கள் அல்லது வேறு ஒத்தக்கருத்துச் சொற்கள் அறிந்திருப்பீர்களானால் அவற்றைப் பின்னூட்டத்தில் குறித்து வைத்துவிட்டுச் செல்லும் படிக்கேட்டுக்கொள்கின்றேன். அவை யாரேனும் ஒருவருக்கு பயன்படலாம் அல்லவா?
பழம் தமிழ் -ஆங்கிலம் அருஞ்சொற்கள், அருஞ் சொற்கள், அருஞ் சொல், பழங்கள் தமிழ் கலைச் சொற்கள், கலைச்சொல், கலைச்சொற்கள், Fruits Tamil Glossary, 96 Fruit Names, Names of Fruits in Tamil and English, Glossary of Modern Tamil Names of Fruits

5 comments:

Anonymous said...

(பாலைப்பழம் போன்ற ஒருப்பழம்)
அது என்ன பாலைப்பழம்? இது எங்கு விளைக்கிறது?

HK Arun said...

எமது தாயகத்தின் வன்னிப் பகுதியில் பாலைப்பழம் இருக்கின்றது. நான் கொடுத்துள்ள இணைப்பில் உள்ளதைப் போன்ற பழம். ஆனால் சற்று வழுவழுப்பாக இருக்கும். மிகவும் இனிப்பானது.

இதைத் தவிர வீரைப்பழம், உருவிந்தம் பழம், சூரைப்பழம் போன்றப் பழங்களும் உள்ளன. இவற்றின் சரியான ஆங்கிலப் பெயர் தெரியாததால் விட்டுவிட்டேன். அதன் பெயரை அறிந்ததும் பட்டியலில் இணைத்து விடுகின்றேன்.

நன்றி

Anonymous said...

தமிழகத்தில் கோடியக்காடு வேதாரண்யத்திலும் பாலைப்பழம் இருக்கிறது.
http://www.tamilmozhi.com/dataware/districts/nagapattinam.html

kanagaraj s said...

டாப் டென்ஷேர்ஸ் மூலம் தங்களின் ஆங்கிலம் பாடம் பிளாக் பற்றி தெரிய வந்தது. மிகவும் அருமை.அரிதான விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. தொடரட்டும் உங்கள் பணி.
நன்றியுடன்
கனகராஜ்

HK Arun said...

-கனகராஜ்

தங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி.

தமது பதிவில் எமது தளத்தை அறிமுகப் படுத்திய "டாப் டென்ஷேர்ஸ்" வலைத்தளத்தினருக்கும் மிக்க நன்றி.

அன்புடன் அருண் | HK Arun

பதிப்புரிமை © 2007-2009 ஆங்கிலம்.ப்ளொக்.கொம்
எமது ஆங்கிலம் வலைத்தளத்தின் பாடப் பயிற்சிகளை பத்திரிக்கைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள், வலைப்பதிவுகள், கருத்துக்களங்கள், மன்றங்கள் போன்றவற்றில் மீள்பதிவிடுவதாயின் தயவு செய்து எமது வலைத்தளத்தின் பெயரை aangilam.blogspot.com கட்டாயம் குறிப்பிட்டே மீள்பதிவிட வேண்டும். அவ்வாறு மீள்பதிவிடுவோர் எமது மின்னஞ்சல் முகவரியூடாகவோ arunhk.info AT gmail.com அல்லது குறிப்பிட்ட பாடத்தின் பின்னூட்டமாகவோ அறியத் தர வேண்டும்.
இப்பாடங்கள் பலருக்கும் பயன்பட வேண்டும் எனும் நன்நோக்குடன் நீங்கள் மீள்பதிவிடுபவராக இருக்கலாம் அவ்வாறாயின், பாடங்களின் ஒரு பகுதியை மட்டும் இட்டு, எமது தளத்திற்கு இணைப்பு வழங்குங்கள். தயவு செய்து முழுப் பாடங்களையும் அப்படியே வெட்டி ஒட்டுவதைத் தவிர்க்கவும். நன்றி.