Monday, December 24, 2007

ஆங்கில பாடப் பயிற்சி - 1 (Grammar Patterns 1)

If you would like to learn English you should practice the Grammar notes daily, until you can recall them instantly.

If you are through with the Grammar you can pick up the English Conversation daily read this note with the Tamil sentences.

Practice the following Grammar Patterns Daily.

முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கண பாடப் பயிற்சி.

இது பாடசாலை பாடத்திட்டத்தைப் போன்றோ, ஆங்கில பேச்சுப் பயிற்சி (Spoken English) போன்றோ அல்லாமல், முழுமையான தமிழ் விளக்கத்துடன் கூடிய ஆங்கில இலக்கண பாடத் திட்டத்தைக்கொண்டது. சகல "Grammar Patterns" களையும் உள்ளடக்கப் பட்டுள்ளது.

இப்பாடத்திட்டத்தில் இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேசவும், எழுதவும், வாசிப்பதற்கும் இத்தளத்தின் ஊடாகக் கற்றுக்கொள்ளலாம்.

தமிழ் மொழிப்பெயர்ப்பு பற்றிய விளக்கம்

உதாரணமாக "I do a job" என்பதை தமிழில் மொழி பெயர்ப்போமானால் "நான் ஒரு வேலை செய்கின்றேன்" என்று தான் கூறுவோம். ஆனால் நாம் இந்த ஆங்கில பாடப் பயிற்சியில் "நான் செய்கின்றேன் ஒரு வேலை" என்றே தமிழாக்கம் செய்துள்ளோம். இதற்கான காரணம் இவ்வாறுதான் ஆங்கிலத்தை தமிழில் மொழிப்பெயர்க்க வேண்டும் என்று நாம் கூறவில்லை. ஆனால் முடிந்தவரையில் ஆங்கில நடைக்கு ஏற்றாற் போல் தமிழ் விளக்கம் கொடுத்து பயிற்சி செய்தால், அது ஆங்கில வார்த்தைகளுக்கு மட்டுமல்லாமல் ஒவ்வொரு ஆங்கில சொற்களுக்குமான தமிழ் அர்த்தத்தையும் சரியாக விளங்கிக் கற்பதற்கு இலகுவாய் இருக்கும் என்பது எமது கருத்தாகும்.

சரி பாடத்திற்குச் செல்வோம்.

இங்கே "do a job" எனும் ஒரு வார்த்தையை இன்றையப் பாடமாக எடுத்துள்ளோம். இவ்வார்த்தையின் தமிழ் அர்த்தம் "செய் ஒரு வேலை" என்பதாகும். இதை "நான் செய்கின்றேன் ஒரு வேலை, நான் செய்தேன் ஒரு வேலை, நான் செய்வேன் ஒரு வேலை" என ஒரே வார்த்தையை 73 விதமாக மாற்றி பயிற்சி செய்வதே இப்பாடத்திட்டத்தின் நோக்கமாகும். இது மிகவும் இலகுவாகவும் அதிவிரைவாகவும் ஆங்கிலம் கற்றுக்கொள்ளக் கூடிய ஓர் பயிற்சி முறையாகும்.

do a job

1. I do a Job.
நான் செய்கின்றேன் ஒரு வேலை.

2. I am doing a job.
நான் செய்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை.

3. I did a job.
நான் செய்தேன் ஒரு வேலை.

4. I didn't do a job.
நான் செய்யவில்லை ஒரு வேலை.

5. I will do a job.
நான் செய்வேன் ஒரு வேலை.
நான் செய்கிறேன் (சற்றுப் பிறகு) ஒரு வேலை.

6. I won't do a job.
நான் செய்யமாட்டேன் ஒரு வேலை.

7. Usually I don't do a job.
சாதாரணமாக நான் செய்கிறேனில்லை ஒரு வேலை.

8. I am not doing a job.
நான் செய்துக் கொண்டிருக்கின்றேனில்லை ஒரு வேலை

9. I was doing a job.
நான் செய்துக் கொண்டிருந்தேன் ஒரு வேலை.

10. I wasn't doing a job.
நான் செய்துக் கொண்டிருக்கவில்லை ஒரு வேலை.

11. I will be doing a job.
நான் செய்துக் கொண்டிருப்பேன் ஒரு வேலை.

12. I won't be doing a job.
நான் செய்துக் கொண்டிருக்கமாட்டேன் ஒரு வேலை.

13. I am going to do a job.
நான் செய்யப் போகின்றேன் ஒரு வேலை.

14. I was going to do a job.
நான் செய்யப் போனேன் ஒரு வேலை.

15. I can do a job.
16. I am able to do a job.
எனக்கு செய்ய முடியும் ஒரு வேலை

17. I can't do a job.
18. I am unable to do a job.
எனக்கு செய்ய முடியாது ஒரு வேலை.

19. I could do a job.
20. I was able to do a job.
எனக்கு செய் முடிந்தது ஒரு வேலை.

21. I couldn't do a job.
22. I was unable to do a job.
எனக்கு செய்ய முடியவில்லை ஒரு வேலை.

23. I will be able to do a job.
எனக்கு செய்ய முடியுமாக இருக்கும் ஒரு வேலை.

24. I will be unable to do a job.
எனக்கு செய்ய முடியாமலிருக்கும் ஒரு வேலை.

25. I may be able to do a job.
எனக்கு செய்ய முடியுமாக இருக்கலாம் ஒரு வேலை.

26. I should be able to do a job.
எனக்கு செய்ய முடியுமாகவே இருக்கும் ஒரு வேலை

27. I have been able to do a job.  (Perfect Tense பார்க்கவும்)
சற்றுமுன்பிருந்து/கிட்டடியிலிருந்து எனக்கு செய்யமுடியுமாக இருக்கின்றது ஒரு வேலை.

28. I had been able to do a job.
அக்காலத்திலிருந்து/அன்றிலிருந்து எனக்கு செய்யமுடியுமாக இருந்தது ஒரு வேலை.

29. I may do a job.
30. I might do a job.
31. I may be doing a job.
நான் செய்யலாம் ஒரு வேலை.

32. I must do a job.
நான் செய்ய வேண்டும் ஒரு வேலை.(அழுத்தம்)

33. I must not do a job.
நான் செய்ய வேண்டியதில்லை ஒரு வேலை.
நான் செய்யக் கூடாது ஒரு வேலை.

34. I should do a job.
நான் செய்யவே வேண்டும் ஒரு வேலை. (மிக அழுத்தம்)

35. I shouldn't do a job.
நான் செய்யவே வேண்டியதில்லை ஒரு வேலை.
நான் செய்யவே கூடாது ஒரு வேலை.

36. I ought to do a job.
நான் எப்படியும் செய்யவே வேண்டும் ஒரு வேலை. (மிக மிக அழுத்தம்)

37. I don't mind doing a job.
எனக்கு ஆட்சேபனையில்லை செய்ய ஒரு வேலை.

38. I have to do a job.
நான்/எனக்கு செய்ய வேண்டும் ஒரு வேலை.

39. I don't have to do a job.
நான்/எனக்கு செய்ய வேண்டியதில்லை ஒரு வேலை.

40. I had to do a job.
நான்/எனக்கு செய்ய வேண்டி ஏற்பட்டது ஒரு வேலை.

41. I didn't have to do a job.
நான்/எனக்கு செய்ய வேண்டி ஏற்படவில்லை ஒரு வேலை.

42. I will have to do a job.
எனக்கு செய்ய வேண்டி ஏற்படும் ஒரு வேலை.

43. I won't have to do a job.
எனக்கு செய்ய வேண்டி ஏற்படாது ஒரு வேலை.

44. I need do a job.
எனக்கு அவசியம் செய்ய (வேண்டும்) ஒரு வேலை.

45. I needn’t do a job.
எனக்கு அவசியமில்லை செய்ய ஒரு வேலை.

46. He seems to be doing a job.
அவன் செய்கின்றான் போல் தெரிகின்றது ஒரு வேலை.

47. He doesn't seem to be doing a job.
அவன் செய்கின்றான் போல் தெரிகின்றதில்லை ஒரு வேலை.

48. He seemed to be doing a job.
அவன் செய்கிறான் போல் தெரிந்தது ஒரு வேலை.

49. He didn't seem to be doing a job.
அவன் செய்கிறான் போல் தெரியவில்லை ஒரு வேலை

50. Doing a job is useful.
செய்வது(தல்) ஒரு வேலை பிரயோசனமானது.

51.
Useless doing a job.
பிரயோசனமில்லை செய்வது ஒரு வேலை.

52.
It is better to do a job.
மிக நல்லது செய்வது ஒரு வேலை.

53.
I had better do a job.
எனக்கு மிக நல்லது செய்வது ஒரு வேலை.

54.
I made him do a job.
நான் அவனை வைத்து செய்வித்தேன் ஒரு வேலை.

55.
I didn't make him do a job.
நான் அவனை வைத்து செய்விக்கவில்லை ஒரு வேலை

56.
To do a job I am going to USA.
செய்வதற்கு ஒரு வேலை நான் போகின்றேன் USA க்கு


57. I used to do a job.
நான் பழக்கப்பட்டிருந்தேன் செய்ய ஒரு வேலை.

58.
Shall I do a Job?
நான் செய்யவா ஒரு வேலை?

59.
Let’s do a job.
செய்வோம் ஒரு வேலை.

60.
I feel like doing a job.
எனக்கு நினைக்கின்றது செய்ய ஒரு வேலை.

61.
I don't feel like doing a job.
எனக்கு நினைக்கின்றதில்லை செய்ய ஒரு வேலை.

62.
I felt like doing a job.
எனக்கு நினைத்தது செய்ய ஒரு வேலை.

63.
I didn't feel like doing a job.
எனக்கு நினைக்கவில்லை செய்ய ஒரு வேலை.

64.
I have been doing a job.
நான் கிட்டடியிலிருந்து/சிலகாலமாக செய்துக் கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை.

65.
I had been doing a job.
நான் அன்றிலிருந்து/அக்காலத்திலிருந்து செய்துக்கொண்டிருந்தேன் ஒரு வேலை.

66.
I see him doing a job.
எனக்கு தெரிகின்றது அவன் செய்கின்றான் ஒரு வேலை.

67.
I don't see him doing a job.
எனக்கு தெரிகின்றதில்லை அவன் செய்கின்றான் ஒரு வேலை.

68.
I saw him doing a job.
எனக்கு தெரிந்தது அவன் செய்கிறான் ஒரு வேலை.

69.
I didn't see him doing a job.
எனக்கு தெரியவில்லை அவன் செய்கிறான் ஒரு வேலை.

70.
If I do a job I will get experience.
நான் செய்தால் ஒரு வேலை எனக்கு கிடைக்கும் அனுபவம்.

71.
If I don't do a job I won't get experience.
நான் செய்யாவிட்டால் ஒரு வேலை எனக்கு கிடைக்காது அனுபவம்.

72.
If I had done a job I would have got experience.
என்னால் செய்யப்பட்டிருந்தால் ஒரு வேலை எனக்கு கிடைத்திருக்கும் அனுபவம். (செய்யவும் இல்லை கிடைக்கவும் இல்லை)

73.
It is time I did a job.
இது தான் நேரம் நான் செய்வதற்கு ஒரு வேலை.

கவனத்திற்கு:

உதாரணமாக மேலே நாம் கற்றப் பாடத்தில் "do a job" எனும் வார்த்தை சில இலக்கங்களின் போது "doing a job" என்று வந்துள்ளதை அவதானியுங்கள். அதாவது பிரதான வினைச்சொல்லுடன் 'ing' யும் இணைத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்விலக்கங்களை கீழே கொடுத்துள்ளோம். இவ்விலக்கங்களின் போது எப்பொழுதும் பிரதான வினைச் சொல்லுடன் "ing" யையும் இணைத்தே பயன்படுத்த வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

Verb with + ing: 2, 8, 9, 10, 11, 12, 31, 37, 46, 47, 48, 49, 50, 51, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69.

உதாரணம்:

speak in English
speaking in English. என்று வந்துள்ளதை அவதானிக்கவும்.

Homework:

கீழே 10 வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை மேலே நாம் கற்றதைப் போன்று ஒவ்வொரு வாக்கியங்களையும் 73 விதமாக மாற்றி எழுதி பயிற்சி செய்யவும். எழுதும் பொழுது வாசித்து வாசித்து எழுதுங்கள்.  அது மிக எளிதாக உங்கள் மனதில் பதிந்துவிடும்.

1. I speak in English.
நான் பேசுகின்றேன் ஆங்கிலத்தில்.
2. I write a letter.
நான் எழுதுகின்றேன் ஒரு கடிதம்.
3. I listen to News.
நான் செவிமடுக்கின்றேன் செய்திகளுக்கு.
4. I fill up the form.
நான் நிரப்புகின்றேன் விண்ணப்பம்.
5. I go to school.
நான் போகின்றேன் பாடசாலைக்கு.
6. I do my homework.
நான் செய்கின்றேன் வீட்டுப்பாடம்.
7. I read a book.
நான் வாசிக்கின்றேன் ஒரு பொத்தகம்.
8. I travel by bus.
நான் பிரயாணம் செய்கின்றேன் பேரூந்தில்.
9. I look for a job.
நான் தேடுகின்றேன் ஒரு வேலை.
10. I ride a bike.
நான் ஓட்டுகின்றேன் உந்துருளி.

கவனிக்கவும்

உதாரணமாக "speak in English" எனும் ஒரு வாக்கியத்தை எடுத்துக் கொண்டோமானால் அதை:

I speak in English.
நான் பேசுகின்றேன் ஆங்கிலத்தில்.

I am speaking in English.
நான் பேசிக்கொண்டிருக்கின்றேன் ஆங்கிலத்தில்.

I spoke in English.
நான் பேசினேன் ஆங்கிலத்தில்.

I didn't speak in English.
நான் பேசவில்லை ஆங்கிலத்தில்.

I will speak in English.
நான் பேசுவேன் ஆங்கிலத்தில்.

என மேலே காட்டியுள்ளதைப் போன்று அதே இலக்க வரிசைக் கிரமத்தில் 73 வாக்கியங்களாக மாற்றி எழுதி பயிற்சி செய்யவும். இது மிகவும் இலகுவான ஓர் பயிற்சி முறையாகும்.

Long Forms = Sort Forms

Do + not = Don’t
Does + not = Doesn’t
Did + not = Didn’t
Will + not = Won’t
Was + not = Wasn’t
Were + not = Weren’t
Can + not = Can’t
Could + not = Couldn’t
Have + not = Haven’t
Has + not = Hasn’t
Had + not = Hadn’t
Need + not = Needn’t
Must + not = Mustn’t
Should + not = Shouldn’t
Would + not Wouldn't

இப்பாடத்துடன் தொடர்புடை இரண்டு கிரமர் பெட்டன்களின் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றையும் பயிற்சிச் செய்துக்கொள்ளுங்கள்.

Grammar Patterns 2

Grammar Patterns 3

மற்றும் இன்றையப் பாடத்தில் நாம் கற்ற 73 வாக்கியங்களும் (அதே இலக்க வரிசைக் கிரமத்தில்) ஒவ்வொரு பாடங்களாக விரிவடையும். அப்பொழுது அதனதன் பயன்பாடுப் பற்றியும் இலக்கண விதிமுறைகள் பற்றியும் விரிவாக கற்கலாம். விரிவாக எழுதப்பட்ட பாடங்களுக்கு குறிப்பிட்ட வாக்கியத்தினூடாக இணைப்பு வழங்கப்படும். அவ்விணைப்பை சொடுக்கி பாடத்திற்கு செல்லலாம். பிழையற்ற உச்சரிப்பிற்கு பாடங்களுடன் இணைக்கப் பட்டிருக்கும் ஒலிக்கோப்பினைச் சொடுக்கி பயிற்சி பெறுங்கள்.

இந்த கிரமர் பெட்டன்களைத் தவிர மேலும் சில கிரமர் பெட்டன்கள் உள்ளன. அவை உரிய பாடங்களின் போது வழங்கப்படும்.

ஆங்கிலம் துணுக்குகள், ஆங்கிலம் மொழி வரலாறு, அமெரிக்க ஆங்கிலம் போன்றவற்றையும் பார்க்கலாம்.

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

"பேசும் மொழியைத்தான் இலக்கண விதிகளாக வகுக்கப்பட்டுள்ளதே தவிர, உலகில் எந்த ஓர் மொழியும் இலக்கணக் கூறுகளை வகுத்துவிட்டு மக்களின் பேச்சுப் புழக்கத்திற்கு வரவில்லை.

இக்கூற்று உலகில் உள்ள எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். எனவே "ஆங்கில இலக்கணம்" என்பதற்கு அச்சம் கொள்ளத் தேவையில்லை. முதலில் சத்தமாக பேசிப் பழகுங்கள்.

மீண்டும் கூறிக்கொள்கின்றோம். இது மிகவும் எளிதாக ஆங்கிலம் கற்பதற்கான ஓர் பயிற்சி முறையாகும்.

சரி பயிற்சிகளைத் தொடருங்கள்.

மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.

இப்பாடத்திட்டம் பற்றிய உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை எம்முடன் பகிர்ந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி

அன்புடன் ஆசிரியர் அருண் HK Arun

92 comments:

தமிழ்பித்தன் said...

இதை ஏன் நீங்கள் ஒரு குழுப்பதிவுக்கு உட்படுத்தக் கூடாது எல்லோரும் தனித்தனியாக செய்யாமல் ஒன்றாக செய்ய இலகுவாக இருக்கும் நானும் வேணுமானால் உங்களுடன் இணைகிறேன்

TamilNenjam said...

very nice info

ஜீவி said...

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

ரவிசங்கர் said...

ஆங்கிலச் சொற்களை அப்படியே இடம் மாறாமல் - நான் செய்கிறேன் வேலை - என்பது செயற்கையான தமிழாக்கமாக இருக்கிறது. நான் வேலை செய்கிறேன் என்று தமிழ் வழக்குக்கு ஏற்ப எழுதினாலே எந்த சொல் எதற்கு என்று மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்களா?

Arun said...

உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி இரவிசங்கர்.

ஆங்கில வழக்கிற்கு ஏற்ப அப்படியே இடம் மாறாமல் தமிழாக்கம் செய்வது, செயற்கையான தமிழாக்கமாக
இருக்கும் என்பது உண்மைதான்.

ஆனால் இங்கே ஆங்கிலம் கற்பதையே முதன்மை படுத்தியுள்ளேன். முடிந்தவரையில்
ஒவ்வொரு ஆங்கில சொற்களுக்குமான தமிழ் அர்த்தங்களையும் விளங்கி கற்பதால் விரைவாகவும், இலகுவாகவும் கற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என நான் கருதுகிறான். அதே வேளை ஆங்கிலச் சொற்களுக்கான சரியான தமிழ் அர்த்தத்தையும் விளங்கிக்கொள்வார்கள் அல்லவா?

ஆரம்பத்தில் ஆங்கிலச் சொற்களிற்கான சரியான தமிழ் விளக்கத்துடன் கற்றுக்கொண்டார்களேயானால், காலப்போக்கில் அவர்களாகவே
தத்தமது பேச்சு வழக்கிற்கு ஏற்றவகையில் மாற்றிக்கொள்வார்கள் அல்லவா?

ஜமாலன் said...

பயனுள்ள உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

Arun said...

நன்றி ஜமாலன்!

Anonymous said...

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்
rajah

Arun said...

வாழ்த்துக்களுக்கு நன்றி Rajah

செந்தில்நாதன் செல்லம்மாள் said...

Thanks for your efforts...

Arun said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி செந்தில்நாதன் செல்லம்மாள் அவர்களுக்கு.

Anonymous said...

Dear sir, thankyou for teaching english.i w'll refer to my friends.also ihave one small doubt.that, i w'll send it to your email add.pl.reply.
s.kumar.

Anonymous said...

Very good. This will be simple way tp learn/understand english.

In some cases, tamil translation needs to be corrected.

Arun said...

நன்றிகள் குமார் மற்றும் அனானிமவுஸ் இருவருக்கும்.

//In some cases, tamil translation needs to be corrected.//

இவற்றை குறிப்பிட்டுக் காட்டினீர்களானால் சரிப்படுத்தலுக்கு இலகுவாக இருக்கும்.

நான் முயற்சி செய்கின்றேன்.

நன்றி

Abu Mohamed said...

Please start English Grammar from the chapter of sentence

= A sentence is a group of words, which gives complete sense.

There are four kinds of sentences
=Assertive sentence (statement)
=Interrogative sentence (question)
=Imperative sentence (command and Request)
=Exclamatory sentence (Exclamation and sarrow)

Arun said...

Abu Mohamed அவர்களுக்கு

உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது.

நாம் இங்கே வழங்கி வருவது எமது "HE English Institute" இன் ஆங்கில பாடப் பயிற்சி முறையையே.

"எமது பாடத்திட்டம்" பகுதியில் நீங்கள் பார்க்கலாம்.

இருப்பினும் அவற்றில் நீங்கள் கூறிய விடயங்களும் உள்ளடக்கப் பட்டுள்ளன. எதிர்வரும் பாடங்களில் காணலாம்.

நேரம் கிடைக்கும் போதே எழுதிவருவதால், உடனடியாக எல்லாவற்றையும் எழுத முடியாமைக்கு வருந்துகிறேன்.

நன்றி!

S.BALAJI said...

ஓர் அருமையான முயற்சி.வாழ்த்துக்கள்

HK Arun said...

s.balaji

வாழ்த்துக்களுக்கு நன்றி

FAROOK ABDULLA said...

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்;FAROOK ABDULLA;ABUDHABI.UAE

Anonymous said...

நல்ல பயனுள்ள செயல்.

தொடருங்கள்.

வாழ்த்துக்கள்.

saraganesh said...

Hello Sir,

Really, ur job is very Good ...
Please continue this......

Congrats....

saraganesh said...

Hello Sir,

Really u r doing good job.....
Please continue this....


Congrats....

HK Arun said...

- Farook Abdulla
- Anonymouse
- Saraganesh

மூவரது வாழ்த்துக்களுக்கும் நன்றி

மூர்த்தி said...

அருணுக்கு,

உங்களது இந்த சேவை எங்களை போன்ற பலபோருக்கு மிகவும் பயன் உள்ளதாக அமையும். இது போன்று நிறைய பாடப் பயிற்சிகளைத் தொடர்ந்து கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். உங்களது சேவைக்கு எனது மனமார்ந்த நன்றி.

வடிவேலன் .ஆர் said...

நல்ல சேவை தொடர்ந்து செய்து என் போன்ற அனைவருக்கும் ஆங்கிலம் கற்றுக்கொடுத்து குருவாக உயருங்கள்

HK Arun said...

வடிவேலன் ஆர்

வணக்கம்

//நல்ல சேவை தொடர்ந்து செய்து என் போன்ற அனைவருக்கும் ஆங்கிலம் கற்றுக்கொடுத்து குருவாக உயருங்கள்.//

எமது இந்த "ஆங்கிலம்" வலைத்தளத்தில் ஆங்கிலம் கற்று நான்குப் பேரேனும் உயர்வானார்கள் அதுவே எனக்கு மனமகிழ்வானதாகும்.

நன்றி அன்பரே!

pondy said...

HELLO SIR, ur job is very good...
PLS CONTINUE........

rajanga said...

i really appriciated Mr.Arun..
you have done a very good job to tamil and tamil people.

Thanks..
Rajangbaoopathy Muniswamy
USA

HK Arun said...

- Pondy
- Rajanga

உங்களுடைய கருத்துக்கள் மகிழ்வைத் தருகின்றன.

நன்றிகள்.

Anonymous said...

hello sir,
i search many sites and books for learn .all the ways are not suitable.but from your program i have the confidence to speak english earlier.i am tamil medium students.through these program the tamil people can understand the meaning of each and every word.your direction of approach is good and correct.(direct translation)

HK Arun said...

அன்புடன் அனானி மாணவருக்கு

சரியோ பிழையோ எழுதுங்கள்.
சரியோ பிழையோ அச்சமின்றிப் பேசுங்கள்.

எதற்கும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

//(direct translation)//

முடிந்தவரை நேரடி தமிழாக்கமாகவே தர முயற்சிக்கின்றோம். விளக்கங்கள் தேவையெனில் கேட்டெழுதுங்கள்.

நன்றி.

joshe said...

i am Nandhini . i am std 11th .
i will use your English patten sir
this is very easy, i want take to english sir . my school is not interest to english . so i will use you are grammar patten sir.
it's nice sir ...
thanking you.....
bay....

udhaya said...

மிக்க நன்றி , மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது நண்பரே!!!
-udhaya.

Anonymous said...

From: Nandha Kumar.u
(Chengalpet)
Today only i seen your blog....
Excellent work.........
Please continue your work....
Thank You.....

Galeel Bhasha said...

மிக்க நன்றி , மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது !!!

தொடர்க உம் நற்பனி !!!

Chandran said...

மிகவும் நன்றி.வாழ்த்துக்கள்.

Anonymous said...

வந்தோம் சென்றோம் என்றில்லாமல் தங்களுக்கு தெரிந்ததை, மிகவும் சிரமம் எடுத்து அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணமாக சிறப்பாக கொடுத்து பிரம்மிக்க வைத்துவிட்டீர்கள்.

எப்படி நன்றி சொல்வது தெரியவில்லை.

தொடருங்கள்

HK Arun said...

- Joshe

- Udhaya

- Anonymous 1

- Galeel Bhasha

- Chandran

- Anonymous 2

உங்கள் அனைவருடைய கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.

அன்புடன் அருண்

Hassan said...

Really it is a great job.

Anonymous said...

THANK U SIR.

meera said...

THANK U SO MUCH SIR.

செம்புலம் said...

வணக்கம்... அருன் நீங்கள் புரட்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். இது போன்றவர்களின் வறட்சிதான் சமூகத்தில் இருந்து வந்தது. அதை நீங்கள் இட்டு நிறப்புகிறீர்கள் வாழ்த்துகள்.

தொடர்க உமது பயணம்

- சென்னைத்தமிழன்

HK Arun said...

Hassan
Anonymous
meera
செம்புலம்

உங்கள் அனைவரது வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

salam said...

It is really very useful to many people who wants to learn english through their mother tounge. Pls. go ahead. Wish you all success.

Thanks
A.Salam - Palakkad

Enathu Payanam said...

Its really a nice starting point to learn English in a different way and different method.

Good effort. Thanks Arun.

Thanks Giving,
Krishna Prabhu,
Chennai

Anonymous said...

sir,

iam doing my pg. but still i dont know to speak english, i am planning to go to abroad. your approach is very powerful and easy to learn. so pls teach me abroad slang also.

thankyou
rama

NEELAKANNAN said...

Hi arun you done very nice job, thank you very much, It's very usefull for me.

NEELAKANNAN said...

Hi arun you done very nice job,thanhk you very much. It's very usefull for me.

Muthiah said...

I am verry new to this blogspots Thanks to Vikatan.com. I hope it will be useful for me. I started my first lesson today If i have any doubts while doing my exercises whom shall I contact. Thanks
Muthiah R
muthiahrm@gmail.com

haider said...

this is very easy ,very thank!

kalaiyarasi said...

it is a wonderful job many of us searching website for getting knowledge of english they will get more things thanks

kalai said...

this is very useful for many tamilians

Priyamudan said...

hi arun,
u are good thinking like this spoken English, so much peoples confusing how to learn english, so much of english classes r very tuf. anyway thanks for good initiative,
All the best
Once thanks for ur initative.........

Anonymous said...

good very usefull lession to me

Krishnan said...

thanks very usefull lession to me

Suppan said...

You are doing a great job.

I am planning to do something similar to this.

Suppan

Anonymous said...

I wish,I had a English knowledge like you.
I think. I can improve my English knowledge like you. help with webside

மஞ்சூர் ராசா said...

வணக்கம்

வலைச்சரத்தில் மாதங்கி உங்கள் பதிவை குறிப்பிட்டிருந்தார். அதனாலேயே வரும் வாய்ப்பு கிட்டியது. மிக நல்ல பயனுள்ள சேவை.

ஆங்கிலம் ஓரளவுக்கு தெரிந்திருந்தாலும் கூட நிறைய இலக்கணப்பிழைகளை நான் செய்வதுண்டு. இங்கு வந்து அவற்றை இனி தெளிவுப்படுத்திக்கொள்ள முடியும் என நம்புகிறேன்.
வாழ்த்துகள். மிகவும் நன்றி.

HK Arun said...

salam
Enathu Payanam
Anonymous 1
NEELAKANNAN
Muthiah
haider
kalaiyarasi
kalai
Priyamudan
Anonymous 2
Krishnan
Suppan
Anonymous 3

அனைவரது கருத்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி.

அன்புடன் அருண்

HK Arun said...

//வலைச்சரத்தில் மாதங்கி உங்கள் பதிவை குறிப்பிட்டிருந்தார். அதனாலேயே வரும் வாய்ப்பு கிட்டியது.//

நன்றி மஞ்சூர் ராசா.

வலைச்சரம் மாதங்கிக்கும் என் அன்பான நன்றிகள்.

Anonymous said...

this is very useful site.
please continue it.

bala said...

i think this is the best site of learn english,all the best.

HK Arun said...

//this is very useful site.
please continue it.//

நன்றி அனானி நண்பரே!

நிச்சயமாக தொடருவோம்.

HK Arun said...

-bala

//i think this is the best site of learn english,all the best.//

உங்கள் கருத்து மகிழ்ச்சியை தருகின்றது.

நன்றி.

Bala said...

Dear Sir,

Your done a very good job keep it up

Prasath said...

Dear Sir,

I ever seen site like this. It's really good one and I hope in future most of the people will say thanks to you

Ranjit Sachin said...

Really you did the wonderful job for our tamil peoples... You are great... Continue this site.. Please dont stop updating for any reason..

All the best..

Vazha pallandu..

Luv
Ranjit
http://ranjit.110mb.com
http://ranjitsachin.blogspot.com

HK Arun said...

- Bala
- Prasath
- Ranjit Sachin

உங்கள் கருத்துக்கள் மகிழ்வை தருகின்றன. ஊக்குவிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

arunan said...

உலகமெல்லாம் தமிழ்மொழி பரவவேண்டும் என்றால்
தமிழனுக்கு முதலில் ஆங்கிலம் தெரிய வேண்டும்.

நல்ல பணி. உங்களுக்கு ஆயுள் நூறு அல்ல. ஆயிரம் ஆண்டுகள் இருக்க வேண்டும். தமிழ் தெரிந்தவனுக்கு ஆங்கிலம் தெரியவில்லை. ஆங்கிலம் தெரிந்தவனுக்குத் தமிழ் தெரியவில்லை. ஆங்கிலம் தெரிந்த தமிழர்கள் உலகமெல்லாம் பரவும்போது உலகமெல்லாம் தமிழோசை பரவும். அவ்வகையில் பரவும் வகை செய்யும் தங்களது தமிழ்த் தொண்டு தொடரட்டும்.
உங்கள் பெயரிலேயே உங்களோடு உங்களிடமிருந்து ஆங்கிலம கற்றுக் கொள்ளப் பெருமையாக இருக்கிறது.நன்றிகள் பலப்பல.

priya said...

good afternoon sir, i am priya. really you r doing a great job.Hats off to u sir. in yours, எடுத்துக்காட்டாக "I do a job" என்பதை தமிழில் மொழிப் பெயர்த்துக் கூறுவோமானால் "நான் ஒரு வேலை செய்கின்றேன்" என்று தான் கூறுவோம். ஆனால் இந்த ஆங்கில பாடப் பயிற்சியில் அவ்வாறு இல்லாமல் "நான் செய்கின்றேன் ஒரு வேலை" என்று ஆங்கில நடைக்கு ஏற்பவே தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. It's difficult to understand sir. i know how tough it is to change. but if there are two meanings like i mentioned above, it will be really helpful for us. And i have finished my B.E. this year. i was a Tamil medium student till my higher secondary. now i want to speek good English to atten the interview. also i did my college in an average college only. there students always speak only in Tamil. kindly help me. how can i improve my communication skill. also i have no time. i have to atten many companies. thank you sir, if i made any mistake sorry for that. i am excepting your reply sir.

priya said...

good afternoon sir, i am priya. really you r doing a great job.Hats off to u sir. in yours, எடுத்துக்காட்டாக "I do a job" என்பதை தமிழில் மொழிப் பெயர்த்துக் கூறுவோமானால் "நான் ஒரு வேலை செய்கின்றேன்" என்று தான் கூறுவோம். ஆனால் இந்த ஆங்கில பாடப் பயிற்சியில் அவ்வாறு இல்லாமல் "நான் செய்கின்றேன் ஒரு வேலை" என்று ஆங்கில நடைக்கு ஏற்பவே தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. It's difficult to understand sir. i know how tough it is to change. but if there are two meanings like i mentioned above, it will be really helpful for us. And i have finished my B.E. this year. i was a Tamil medium student till my higher secondary. now i want to speek good English to atten the interview. also i did my college in an average college only. there students always speak only in Tamil. kindly help me. how can i improve my communication skill. also i have no time. i have to atten many companies. thank you sir, if i made any mistake sorry for that. i am excepting your reply sir.

Several tips said...

Good post.

HK Arun said...

//உலகமெல்லாம் தமிழ்மொழி பரவவேண்டும் என்றால்
தமிழனுக்கு முதலில் ஆங்கிலம் தெரிய வேண்டும்.//

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு தமிழர் வளரவேண்டும். இன்றைய சூழலில் உலக அரங்கில் தமிழர் மிளிர ஆங்கிலம் அத்தியாவசியம் தான்.

அதேவேளை ஆங்கிலம் கற்போர் தமது தாய் மொழி வளர்ச்சிக்கும் பங்களிப்பார்களானால், பல வளர்ச்சிபடிகளை நாமும் எட்டலாம்.

நன்றி அருணன்.

HK Arun said...

அன்புடன் பிரியா!

//எடுத்துக்காட்டாக "I do a job" என்பதை தமிழில் மொழிப் பெயர்த்துக் கூறுவோமானால் "நான் ஒரு வேலை செய்கின்றேன்" என்று தான் கூறுவோம். ஆனால் இந்த ஆங்கில பாடப் பயிற்சியில் அவ்வாறு இல்லாமல் "நான் செய்கின்றேன் ஒரு வேலை" என்று ஆங்கில நடைக்கு ஏற்பவே தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. It's difficult to understand sir.//

உங்களுக்கு கடிணமாக தெரியும் வாக்கியங்களை கேட்டெழுதுங்கள்.

இனிவரும் பாடங்களில் கடிணமானது போன்று தோன்றும் வாக்கியங்களில் இரண்டு விதமாகவும் விளக்கம் தருகின்றேன்.

நன்றி

HK Arun said...

அன்புடன் Several tips!

நன்றி

Anonymous said...

I'm really very proud of you Mr. Arun. You are a very great person. Continue your good work. Very very thanks to you.

S. Vidhya

Karthikeyan said...

Hi Arun,
You have great job, I appriciate that. I am having simple query about, How to differentiate can- could, may-might-maybe, will-would. Please explain me, How to use that words in correct situations?

HK Arun said...

- அனானி
பின்னூட்டத்திற்கு நன்றி

HK Arun said...

- Karthikeyan

How to differentiate can- could,

can இங்கே:
http://aangilam.blogspot.com/2008/09/16-can-be-able-to.html

could இங்கே:
http://aangilam.blogspot.com/2008/10/17-could-waswere-able-to.html

can - could இரண்டினதும் சிறப்பு பயன்பாடுகள் இங்கே:
http://aangilam.blogspot.com/2008/10/18-polite-and-more-polite.html

//may-might-maybe, will-would. Please explain me, How to use that words in correct situations?//

இவை எதிர்வரும் பாடங்களில் தருகின்றேன்.

கேள்விக்கு நன்றி

Ramanan said...

நல்ல சேவை தொடர்ந்து செய்யுகள்.

jahabar said...

Dear Mr.Arun Sir,

behalf of all learner I thanks to U for your super useful service to all human.Really It's amazing & seems that your site is doing great job.I appreciate your good hardwork.Insha allah U will be good position in ur place.I feel lucky to share my opinion to U.I would like to say some thing about It will be number one site to learn Tamil to English communication in easy format and also quick way.Every Tamil people Should know about your side.I try to do my best to ads your side to all.

Anonymous said...

Really you did the wonderful job for our tamil peoples... You are great... Continue this site.. Please dont stop updating for any reason..

All the best..

BABU Chennai

HK Arun said...

-Ramanan
-Jahabar
-BABU Chennai

உங்கள் கருத்துக்கள் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருகின்றன. உங்கள் ஊக்குவிப்புக்களே எனது உந்து சக்தி.

கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி

அன்புடன் அருண் | HK Arun

Anonymous said...

hi arun im really happy abuot your work.good job.may god bless you and give more good health to continue this.if u could please add some mini stories with different tense and with audio, then it will useful us to improve our spoken english pls pls pl..............s br.arun.your student

Anonymous said...

helo mr arun,
As some of the learners said that both the form of tamil sentence is required . if you give both together it will be easy for us.

wish you all the best.

-as a learner-
r.balamurugan

mj said...

Hello author,

First of all i would like to thank you for this great initiative and effort and this will help all level of people who are interested in improving their skills...
Please continue this great work...
Let other get light for their candle from your knowledge
Great work keep it up

mj said...

Hello author,

First of all i would like to thank you for this great initiative and effort and this will help all level of people who are interested in improving their skills...
Please continue this great work...
Let other get light for their candle from your knowledge
Great work keep it up

Anonymous said...

அன்புடன் நண்பர் அருணுக்கு வணக்கம்
எனக்கு வயது 55 ஆங்கில இலக்கண பிழை வரும் உங்களின் இந்த
பாடம் சொல்லி கொடுக்கும் முறை சற்று வித்தியாசமாக இருந்தாலும்
எளிதில் புரிஉம்படி உள்ளது மிக்க நன்றி ஆசிரியர் அவர்களே ' நன்றி நன்றி

HK Arun said...

-R.Balamurugan

//As some of the learners said that both the form of tamil sentence is required . if you give both together it will be easy for us.//

விரைவில் இருவழி மொழிப்பெயர்ப்புடன் வழங்க முயற்சிக்கின்றேன்.

அறிவித்தமைக்கு நன்றி

HK Arun said...

- Anonymous
//hi arun im really happy abuot your work.good job.may god bless you and give more good health to continue this.if u could please add some mini stories with different tense and with audio, then it will useful us to improve our spoken english pls pls pl..............s br.arun.your student//
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. நீங்கள் கேட்ட ஆங்கில துணுக்குகள், ஒலிப்பதிவுகள் போன்றன எதிர்வரும் பாடங்களில் எதிர்ப்பார்க்கலாம்.

HK Arun said...

அன்புடன் MJ

உங்கள் கருத்து ஊக்கத்தை அளிக்கின்றது. எமது பாடங்கள் தொடர்ச்சியாக வரும்.
நன்றி

HK Arun said...

- Anonymous

வணக்கம் ஐயா (55)

உங்கள் மனம் திறந்தக் கருத்துக்களே எமக்கான உந்து சக்தியாகுகின்றது.
//எளிதில் புரிஉம்படி உள்ளது// என்று குறிப்பிட்டுள்ளீர்கள், அதுவே எமக்கு மகிழ்ச்சியானது.

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

பதிப்புரிமை © 2007-2009 ஆங்கிலம்.ப்ளொக்.கொம்
எமது ஆங்கிலம் வலைத்தளத்தின் பாடப் பயிற்சிகளை பத்திரிக்கைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள், வலைப்பதிவுகள், கருத்துக்களங்கள், மன்றங்கள் போன்றவற்றில் மீள்பதிவிடுவதாயின் தயவு செய்து எமது வலைத்தளத்தின் பெயரை aangilam.blogspot.com கட்டாயம் குறிப்பிட்டே மீள்பதிவிட வேண்டும். அவ்வாறு மீள்பதிவிடுவோர் எமது மின்னஞ்சல் முகவரியூடாகவோ arunhk.info AT gmail.com அல்லது குறிப்பிட்ட பாடத்தின் பின்னூட்டமாகவோ அறியத் தர வேண்டும்.
இப்பாடங்கள் பலருக்கும் பயன்பட வேண்டும் எனும் நன்நோக்குடன் நீங்கள் மீள்பதிவிடுபவராக இருக்கலாம் அவ்வாறாயின், பாடங்களின் ஒரு பகுதியை மட்டும் இட்டு, எமது தளத்திற்கு இணைப்பு வழங்குங்கள். தயவு செய்து முழுப் பாடங்களையும் அப்படியே வெட்டி ஒட்டுவதைத் தவிர்க்கவும். நன்றி.