ஆங்கிலப் பேச்சின் கூறுகள் (Parts of Speech)

மனித உடலின் செயல்பாடுகளுக்கு கை, கால், தலை, மூட்டு என ஒவ்வொரு உடற்கூறுகளும் பயன்படுவதுப் போன்றே, ஒரு மொழியின் பேச்சுக்கு அம்மொழியின் சொற்கூறுகள் அவசியமாகின்றன. எமது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் அதற்கதற்கான தனித்த செயல்பாடுகளைக் கொண்டிருப்பது போன்றே; ஒவ்வொரு சொற்களின் வகைகளும் அதற்கதற்கான தனித்த செயல்பாடுகளை கொண்டுள்ளன. அதேவேளை அச்சொற்கள் தனித்தும், ஒருமித்தும், இடத்திற்கு ஏற்ப மாறுபட்டும் பயன்படுபவையாகும்.

உலகில் எந்த மொழியானாலும் ஒரு மொழியின் மூலம் சொற்களே (Words) ஆகும். ஒரு மொழியில் புழங்கும் சொற்களை வைத்தே அது எம்மொழி என அறிய முடிகிறது. சொற்கள் எனும் போது சொற்களின் பயன்பாடுகள் வெவ்வேறானவை. பெயர்களை அல்லது பொருற்களை குறிப்பதற்கான சொற்கள் பெயர்சொற்கள் என்றும், வினையை  விவரிப்பதற்கான சொற்கள் வினைச்சொற்கள் என்றும், பொருற்களின் தன்மையை விவரிப்பதற்கான சொற்கள் பெயரெச்சங்கள் என்றும், வினையின் தன்மையை விவரிப்பதற்கான சொற்கள் வினையெச்சங்கள் என்றும், ஒருவரின் அல்லது ஒன்றின் பெயரைக் குறிப்பிடாமல் சுட்டிக்காட்டிப் பேசுவதற்கான சொற்கள் சுட்டுப்பெயர்ச்சொற்கள் என்றும், வாக்கியங்களை அல்லது சொற்களை இணைப்பதற்கு இடையே பயன்படும் சொற்கள் இணைப்புச்சொற்கள் என்றும்,   பேசும் மொழியில் பயன்படும் சொற்களின் பயன்பாட்டை எளிதாக விளங்கிக்கொள்வதற்கும், கற்பதற்கும் சொற்களை பல்வேறு கூறுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை தமிழில் “பேச்சின் கூறுகள்” என்று அழைக்கப்படுகின்றது. சிலர் “சொற்களின் வகைகள்” என்றும் கூறுவர்.

ஆங்கிலத்தில் பேச்சின் கூறுகளை எட்டாக வகைப்படுத்தியுள்ளனர். அவைகளே “ஆங்கிலப் பேச்சின் கூறுகள்” (Parts of Speech in English) ஆகும்.

ஆங்கிலப் பேச்சின் கூறுகள் (Parts of Speech in English)

Nouns – பெயர்சொற்கள்
Verbs – வினைச்சொற்கள்
Adjectives – பெயரெச்சங்கள் / பெயருரிச்சொற்கள்
Adverbs – வினெயெச்சங்கள் / வினையுரிச்சொற்கள்
Pronouns – சுட்டுப்பெயர்ச்சொற்கள்
Prepositions – முன்னிடைச்சொற்கள்
Conjunctions – இணைப்புச்சொற்கள் / இடைச்சொற்கள்
Interjections - வியப்பிடைச்சொற்கள்

மேலதிக விளக்கங்களை கீழே பாருங்கள்.

Nouns – பெயர்சொற்கள்

பொருற்கள், நபர்கள், இடங்கள் போன்றவற்றை குறிக்கும் பெயர்கள் அல்லது சொற்கள் பெயர்ச்சொற்களாகும்.

எடுத்துக்காட்டாக:

Manager - நிர்வாகி
Car - மகிழுந்து
England - இங்கிலாந்து
Sarmilan - சர்மிலன்
Tamil - தமிழ்

He is a Manager.
அவர் ஒரு நிர்வாகி. மேலும் >>>

Verbs – வினைச்சொற்கள்

வினையை அல்லது செயலை குறிக்கும் சொற்கள் வினைச்சொற்களாகும்.

எடுத்துக்காட்டாக:

Do - செய்
Come - வா
Speak - பேசு
Ask - கேள்
Go - போ

I do a job.
நான் செய்கிறேன் ஒரு வேலை. மேலும் >>>

Adjectives – பெயரெச்சங்கள் / பெயரடைகள் / பெயருரிச்சொற்கள்

ஒரு பொருளின், இடத்தின், நபரின் (பெயரின்) குணத்தினை அல்லது தன்மையை மேலும் விவரித்துக்கூற பயன்படுபம் சொற்கள் பெயரெச்சங்ளாகும். இவை சுட்டுப்பெயர்களை விவரித்துக்கூறவும் பயன்படும்.

எடுத்துக்காட்டாக:

Red - சிகப்பு
Yellow - மஞ்சள்
Big - பெரிய
Small - சிறிய
Beautiful - அழகான

She is a beautiful girl.
அவள் ஒரு அழகான பெண். மேலும் >>>

Adverbs – வினெயெச்சங்கள் / வினையடைகள்  / வினையுரிச்சொற்கள்

வினையின் அல்லது செயலின் தன்மையை மேலும் விவரித்து பேசுவதற்கு பயன்படும் சொற்கள் வினையெச்சங்கள் எனப்படும்.

எடுத்துக்காட்டாக:

Usually - சாதாரணமாக
Really - உண்மையாக/ உண்மையில்
Immediately - உடனடியாக
Quickly - வேகமாக
Softly - மென்மையாக

Usually I do a job.
சாதாரணமாக நான் செய்கிறேன் ஒரு வேலை. மேலும் >>>

Pronouns – சுட்டுப்பெயர்கள் / பிரதிப்பெயர்கள் / சுட்டுப்பெயர்ச்சொற்கள்

ஒன்றின் அல்லது ஒருவரின் பெயரைக் குறிப்பிடாமல்; அதற்கு பதிலாக சுட்டிக்காட்டி பேசுவதற்கு பயன்படும் சொற்கள் சுட்டுப்பெயர்கள் அல்லது சுட்டுப்பெயர்ச்சொற்கள் என அழைக்கப்படும்.

எடுத்துக்காட்டாக:

He - அவன்
She - அவள்
It - அது
him - அவனை
her - அவளை

Sarmilan speaks in English.
சர்மிலன் பேசுகிறான் ஆங்கிலத்தில்.

He speaks in English.
அவன் பேசுகிறான் ஆங்கிலத்தில். மேலும் >>>

Prepositions – முன்னிடைச்சொற்கள்

ஒரு வாக்கியத்தின் பெயர்சொற்களுக்கும் சுட்டுப்பெயர்சொற்களுக்கும் முன்பாக பயன்படும் சொற்கள் முன்னிடைச்சொற்களாகும்.

எடுத்துக்காட்டாக:

in - இன், இல்
at - இல், ஆல்
on - இல், மேல்
for - காக
since - இருந்து

Do you work on Mondays?
நீ வேலை செய்கிறாயா திங்கள் கிழமைகளில்? மேலும் >>>

Conjunctions – இணைப்புச்சொற்கள் / இடைச்சொற்கள்

இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சொற்கள் மற்றும் வாக்கியங்கள் இடையே இணைப்பை ஏற்படுத்தும் சொற்கள் இணைப்புச்சொற்களாகும். இதனை இடையிணைப்புச் சொற்கள் என்றும் கூறலாம்.

எடுத்துக்காட்டாக:

and - உம்
but - ஆனால்
or - அல்லது
than - விட
because - ஏனெனில்

I ate bread and butter.
நான் உரொட்டியும் வெண்ணையும் சாப்பிட்டேன். மேலும் >>>

Interjections - வியப்பிடைச்சொற்கள்

பேச்சின் பொழுது வியப்பு, ஆச்சரியம் போன்ற உணர்வை வெளிப்படுத்தப் பயன்படும் சொற்கள் வியப்பிடைச்சொற்களாகும்.

எடுத்துக்காட்டாக:

Wow!
Ha!
Hi!
hello!
Oh!

Wow! I won the match!
வோவ்! நான் ஆட்டத்தில் வென்றேன்! மேலும் >>>

Eight Parts of Speech in a Sentence

ஆங்கில மொழியின் பிரதானப் பேச்சின் கூறுகள் எட்டும் ஒரே வாக்கியத்தில் எவ்வாறு பயன்படுகின்றன என்பதை கீழுள்ள எடுத்துக்காட்டுகள் ஊடாக பார்க்கலாம்.

Sarmilan goes to School. (Three Parts)
Noun Verb Preposition Noun
சர்மிலன் போகிறான் பாடசாலைக்கு.

Sarmilan and his sister go to school. (Five Parts)
Noun Conjunction Pronoun Noun Verb Preposition Noun
சர்மிலனும் அவனது தங்கையும் போகிறார்கள் பாடசாலைக்கு.

Sarmilan and his little sister go to school. (Six Parts)
Noun Conjunction Pronoun Adjective Noun Verb Preposition Noun
சர்மிலனும் அவனது சிறிய தங்கையும் போகிறார்கள் பாடசாலைக்கு.

Wow! Sarmilan and his little sister go to school happily. (All Eight Parts of Speech)
Interjection Noun Conjunction Pronoun Adjective Noun Verb Preposition Noun Adverb
வாவ்! சர்மிலனும் அவனது சிறிய தங்கையும் போகிறார்கள் பாடசாலைக்கு மகிழ்ச்சியுடன்.

குறிப்பு:

ஆங்கில மொழியை சரியாகக் கற்பதற்கு ஆங்கில வாக்கியங்களில் ஆங்கில சொற்கள் எவ்வாறு இடம்பெறுகின்றன என்பதை சரியாக விளங்கிக்கொள்ளல் மிக முக்கியமான ஒன்றாகும். அதற்கு ஆங்கிலப் பேச்சின் கூறுகளை வகைப்படுத்தி ஆங்கிலம் கற்றல் பயன்மிக்கது. வாக்கிய அமைவுகளில் ஆங்கிலப் பேச்சின் கூறுகள் எவ்வாறு பயன்படுகின்றன என்பதை சரியாக விளங்கிக்கொண்டீர்களானால், ஆங்கிலச் சொற்களை சரியாக வடிவமைத்து பேசவும், வாக்கியங்களை ஒழுங்கமைத்து எழுதவும் எளிதாக இருக்கும்.

தொடர்புடையப் பாடங்கள்:

சரி! மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம். அதுவரை உங்கள் பயிற்சிகளைத் தொடருங்கள்.

இப்பாடம் தொடர்பான ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் கேளுங்கள்.

நன்றி!

அன்புடன்
அருண் HK Arun

சொற்கள் வகை, சொற்களின் வகை, சொற்கூறுகள், இலக்கண கூறுகள், இலக்கணக் கூறுகள், சொற்களின் கூறுகள், ஆங்கில இலக்கணம், இலக்கனம், விதிமுறைகள்
Download As PDF

37 comments:

Unknown said...

very good site to learn english correctly. good job done by you.i really appreciate you and your associates. by- ramesh kumar

Unknown said...

very good site to learn english correctly. good job done by you.i really appreciate you and your associates. by- ramesh kumar

Unknown said...

very good work done by you.

HK Arun said...

-Ramesh Kumar

உங்கள் கருத்துரைக்கு நன்றி

Unknown said...

i am very happy to say this.. now i am speaking english very well because of your site thanks arun.......

Unknown said...

i am very happy to say this.. now i am speaking english very well because of your site.. thanks arun

Unknown said...

Thank You very much sir.
we expect more and more from you

sakthi said...

Very nice blog to study english grammer.
Thanks for your effort...By Jack Sakthi.

Anonymous said...

Dear Arun Sir ,
ஆங்கிலத்தின் அடிப்படைகூட எனக்கு தெரியவில்லை ,எனக்கு உதவி செயுங்கள் ,நானும் மற்றவர்களைப்போல் சகஜமாக ஆங்கிலம் பேசுவது எப்படி...?

Anonymous said...

Dear Arun Sir ,


ஆங்கிலத்தின் அடிப்படைகூட எனக்கு தெரியவில்லை ,எனக்கு உதவி செயுங்கள் ,நானும் மற்றவர்களைப்போல் சகஜமாக ஆங்கிலம் பேசுவது எப்படி...?

Justin said...

நானும் மற்றவர்களைப்போல்
சகஜமாக ஆங்கிலம் பேசுவது எப்படி...?

Unknown said...

thank u very much ,mr.arun sir, i really appreciate you.. by_m.vaira

Unknown said...

Hi sir please help me.I saw this wapsite very nice. but I am not understand. Because in of for on have had has why use this words in English.plz tell me?

Unknown said...

Hi,you have done a good job,very nice and how to say thank to you?I don't know but thank you very much for your effort and service, I expect more than it's same like,you continue your service....

Unknown said...

english easy method enna sir?

Unknown said...

Ramanan from jaffna kaithady kumaranagar .i studied a lot of english knowledge from this web address.

Unknown said...

Ramanan from jaffna kaithady kumaranagar .i studied a lot of english knowledge from this web address.

Unknown said...

Super in the web page.

Unknown said...

it is very useful to me

Unknown said...

Hi ! Mr.Arun, Really you Done Great Job, this is useful for us. I don't have word to thank you any way Thank you very much for your Kind Service.

Unknown said...

HI! awesome explanations thank you for ur service.

Unknown said...

thank you

Mohamed Roshan said...

Some Hyperlinks are not working!! Please do something..!!

Unknown said...

it was very usefully!

Unknown said...

Hi Arun, We understood sentence structure basics.Well done!

Unknown said...

hi

rajesh said...

Hi Arun sir,How are you? Could you teach me please;how to write essay in IELTS general exam writing task 1 and task 2. If could have help me for IELTS writing exam. I am really thankful to you. Please reply to me, Thank you

George said...

It is very good job for ESL.

Unknown said...

I want good android app for learn english...pls send me a msg...8300830409...

Unknown said...

Good job .........

Unknown said...

Good job .....

Anonymous said...

Basic concepts explained very well.. Kudos!

Anonymous said...

Thank you for your effort.

Unknown said...

Wow!Thank You so much Sir.this website are very,very useful to me..

Unknown said...

Good job..keep it up sir.

Unknown said...

HK ARUN சார் உங்களுடைய இந்த முயற்சி அடி முட்டாளும் ஆங்கிலம் எலிதில் கற்கலாம் ஆனால் கனிணி முன்பு பார்த்து படித்தால் கண் பார்வை பாதிப்பு ஆகுகிறது தொய்வு செய்து கிராமமக்கள் பயன் படுத்தும் புத்தகம் தாங்களோ எமக்கு புக் வடிவில் வேண்டும் இணையத்தள இணைப்பு மற்றும் ப்ரொவ்சிங் செண்ட்டர்க்கு பப்க முடியாத இருக்கும் தமிழ் வாழ் மக்களுக்கு பயன் பெரும் வைகையில் HK ARUN PUBLICATION என்ற தலைப்பில் BOOKS வெளி இடலாம்
நன்றி
வணக்கம்

Uma S said...

Worthwhile post on Parts of Speech topic. I enjoyed reading all the articles on this subject on your website.

Post a Comment