ஆங்கில பாடப் பயிற்சி 14 (Future "going to")

இன்று நாம் Grammar Patterns -1 றின் பதின்மூன்றாவதாக அமைந்திருக்கும் வார்த்தையை விரிவாக கற்கப் போகின்றோம்.

இந்த "ஆங்கிலம்" வலைத்தளத்திற்கு நீங்கள் புதிதாக வருகைத் தந்தவரானால் உங்கள் பயிற்சிகளை ஆங்கில பாடப் பயிற்சி 1 லிருந்து தொடர்வதே பயனுள்ளதாக இருக்கும். முக்கியமாக "கிரமர் பெட்டன்களை" மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள்.

சரி இன்றையப் பாடத்திற்குச் செல்வோம்.

13. I am going to do a job.
நான் செய்யப் போகின்றேன் ஒரு வேலை.

ஆங்கிலத்தில் எதிர்காலச் சொற் பிரயோகங்களை ஆறு வெவ்வேறு விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது அவை:

1. Future “will”
2. Future “going to” (இன்றைப்பாடம்)
3. Present continuous used as future
4. Future continuous
5. Future perfect simple
6. Future perfect continuous

இவற்றில் நாம் இன்று கற்கப்போவது “going to” என்பதன் பயன்பாடு பற்றி மட்டுமே. "going to" என்பது (வினைச்சொற்களின்) காலத்தைக் குறிப்பதல்ல என்றாலும் அது எதிர்கால எண்ணங்களை, திட்டங்களை வெளிப்படுத்திப் பேசுவதற்கான ஒரு சிறப்பு சொற்பிரயோகமாகும். (Going to is not a tense. It is a special expression to talk about the future.)

“going to” என்பதன் பயன்பாட்டை இரண்டு விதமாகப் பிரித்துப் பார்க்கலாம்.

1. ஏற்கெனவே திட்டமிட்ட ஒரு செயலை செய்யத் தயாராவதை அல்லது செய்ய முயற்சிப்பதை வெளிப்படுத்துவதற்கு. (planned actions in the future)

உதாரணம்:

I am going to buy a new car tomorrow.
நான் வாங்கப்போகின்றேன் ஒரு புதிய மகிழூந்து நாளை.

2. ஏற்கெனவே எதிர்ப்பார்த்த ஒன்று நடக்கப்போகின்றது என்பதை முன்னதாகவே அறிவித்தல், முன்னதாகவே எண்ணத்தை வெளிப்படுத்தல் போன்றவற்றிற்கு. (சோதிடம், சாதகம்) (something is going to happen in the future)

உதாரணம்:

Look at that cloud. I think it is going to rain.
பார் அந்த மேகத்தை. நான் நினைக்கிறேன் மழைப் பெய்யப் போகின்றது.

Positive (Affirmative)
Subject + Auxiliary verb + going to + Main verb
1. I + am + going to + do a job
2. He/ She/ It + is + going to + do a job.
3. You/ We/ They + are + going to + do a job.

Negative
Subject
+ Auxiliary verb + not + going to + Main verb
1. I + am + not + going to + do a job
2. He/ She/ It + is + not + going to + do a job.
3. You/ We/ They + are + not + going to + do a job.

Question (Interrogative)
Auxiliary verb + Subject + going to + Main verb
1. Am + I + going to + do a job?
2. Is + he/ she/ It + going to + do a job?
3. Are + you/ we/ they + going to + do a job? இவற்றில் "Auxiliary verb "துணை வினை வாக்கியத்தின் ஆரம்பித்திலும் “Subject” இற்கு பின்னால் "going to" வந்துள்ளதையும் அவதானியுங்கள்.

இன்றையப் பாடத்தில் First Person Singular, Third person Singular, Second Person Singular and Plural போன்றவற்றின் பயன்பாடுகளைக் கவனியுங்கள். இவற்றை மூன்று பகுதிகளாக வேறுப்படுத்திக் கீழே காட்டப்பட்டுள்ளது.

பகுதி 1

Are you going to do a job?
நீ செய்யப்போகின்றாயா ஒரு வேலை?
Yes, I am going to do a job. (I’m)
ஆம், நான் செய்யப்போகின்றேன் ஒரு வேலை.
No, I am not going to do a job. (I’m not)
இல்லை, நான் செய்யப்போவதில்லை ஒரு வேலை.

Are you going to speak in English?
நீ பேசப்போகின்றாயா ஆங்கிலத்தில்?
Yes, I am going to speak in English. (I’m)
ஆம், நான் பேசப்போகின்றேன் ஆங்கிலத்தில்.
No, I am not going to speak in English. (I’m not)
இல்லை, நான் பேசப்போவதில்லை ஆங்கிலத்தில்.

Are you going to learn English grammar through Tamil?
நீ கற்கப்போகின்றாயா ஆங்கில இலக்கணம் தமிழ் மூலமாக?
Yes, I am going to learn English grammar through Tamil. (I’m)
ஆம், நான் கற்கப்போகின்றேன் ஆங்கில இலக்கணம் தமிழ் மூலமாக.
No, I am not going to learn English grammar through Tamil. (I’m not)
இல்லை, நான் கற்கப்போவதில்லை ஆங்கில இலக்கணம் தமிழ் மூலமாக.

பகுதி 2

Is he going to do a job?
அவன் செய்யப்போகின்றானா ஒரு வேலை?
Yes, he is going to do a job. (he’s)
ஆம், அவன் செய்யப்போகின்றான் ஒரு வேலை.
No, he is not going to do a job. (isn’t)
இல்லை, அவன் செய்யப்போவதில்லை ஒரு வேலை.

Is she going to go to school?
அவள் போகப்போகின்றாளா பாடசாலைக்கு?
Yes, she is going to go to school. (she’s)
ஆம், அவள் போகப்போகின்றாள் பாடசாலைக்கு.
No, she is not going to go to school. (isn’t)
இல்லை, அவள் போகப்போவதில்லை பாடசாலைக்கு.

Is it going to rain?
மழைப் பெய்யப்போகின்றதா?
Yes, it is going to rain. (it’s)
ஆம், மழைப் பெய்யப்போகின்றது.
No, it is not going to rain. (isn’t)
இல்லை, மழைப் பெய்யப்போவதில்லை.

பகுதி 3

Are they going to do a job?
அவர்கள் செய்யப்போகின்றார்களா ஒரு வேலை?
Yes, they are going to do a job. (they’re)
ஆம், அவர்கள் செய்யப்போகின்றார்கள் ஒரு வேலை.
No, they are not going to do a job. (aren’t)
இல்லை, அவர்கள் செய்யப்போவதில்லை ஒரு வேலை.

Are they going to speak in English?
அவர்கள் பேசப்போகின்றார்களா ஆங்கிலத்தில்?
Yes, they are going to speak in English. (they’re)
ஆம், அவர்கள் பேசப்போகின்றார்கள் ஆங்கிலத்தில்.
No, they are not going to speak in English. (aren’t)
இல்லை, அவர்கள் பேசப்போவதில்லை ஆங்கிலத்தில்.

Are we going to win?
நாங்கள் வெற்றிபெறப் போகின்றோமா?
Yes, we are going to win. (we’re)
ஆம், நாங்கள் வெற்றிபெறப் போகின்றோம்.
No, we are not going to win. (aren’t)
இல்லை, நாங்கள் வெற்றிபெறப் போவதில்லை.

இப்பொழுது “Affirmative Sentences” வாக்கியங்கள் இருபத்தைந்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் பயிற்சி செய்வோம்.

1. I am going to sing at the party.
நான் பாடப்போகின்றேன் விருந்துபச்சார நிகழ்வில்.

2. I am going to see him today evening.
நான் பார்க்கப்போகின்றேன் அவனை இன்று மாலை.

3. I am going to have lunch with my customer.
நான் (பகல் சாப்பாடு) சாப்பிடப்போகின்றேன் எனது வாடிக்கையாளருடன்.

4. I am going to fly to Germany
நான் பறக்கப்போகின்றேன் யேர்மனிக்கு.

5. I am going to go on vacation.
நான் போகப் போகின்றேன் (ஓய்வு நாட்களில்) விடுமுறையில்

6. I am going to see what he can do.
நான் பார்க்கப்போகின்றேன் அவனுக்கு என்ன செய்ய முடியும் (என்று)

7. I am going to talk in the meeting.
நான் பேசப்போகின்றேன் கூட்டத்தில்.

8. I am going to visit PKP’s blog.
நான் பார்வையிடப்போகின்றேன் PKP யின் வலைப்பதிவை.

9. I am going to buy a BMW car.
நான் வாங்கப்போகின்றேன் ஒரு BMW மகிழூந்து.

10. I am going to help to Sensolai.
நான் உதவப்போகின்றேன் செஞ்சோலைக்கு.

11. I am going to write an English grammar book.
நான் எழுதப்போகின்றேன் ஓர் ஆங்கில இலக்கணப் புத்தகம்.

12. I am going to go swimming.
நான் போகப்போகின்றேன் நீந்துவதற்கு.

13. I am going to paint the house
நான் வர்ணம் பூசப்போகின்றேன் வீட்டிற்கு.

14. I am going to paint my bedroom tomorrow.
நான் வர்ணம் பூசப்போகின்றேன் எனது படுக்கை அறைக்கு.

15. I am going to miss the train.
நான் தவறவிடப்போகின்றேன் தொடரூந்தை.

16. I am going to tell history of Tamil.
நான் கூறப்போகின்றேன் தமிழின் வரலாற்றை.

17. I am going to help to people.
நான் உதவப்போகின்றேன் மக்களுக்கு.

18. I am going to get down meals from canteen.
நான் எடுபிக்கப்போகின்றேன் உணவு சிற்றுண்டிசாலையிலிருந்து.

19. I am going to watch a movie
நான் பார்க்கப்போகின்றேன் ஒரு திரைப்படம்.

20. I am going to climb that mountain one day
நான் ஏறப்போகின்றேன் அந்த மலைக்கு ஒரு நாள். (ஒரு நாளைக்கு)

21. I am going to leave from Sri Lanka.
நான் வெளியேறப்போகின்றேன் இலங்கையிலிருந்து.

22. I am going to start our own business.
நான் ஆரம்பிக்கப்போகின்றேன் எங்கள் சொந்த வியாபாரத்தை.

23. I am going to make jam
நான் தயாரிக்கப்போகின்றேன் பழக்கூழ்.

24. I am going to play golf with Sarmilan
நான் விளையாடப்போகின்றேன் குழிப்பந்தாட்டம் சர்மிலனுடன்.

25. I am going to win the world.
நான் வெல்லப்போகின்றேன் உலகை.

Homework:

1. மேலே நாம் கற்ற 25 வாக்கியங்களையும் இப்பொழுது கேள்வி பதிலாக மாற்றி பயிற்சி செய்துப் பாருங்கள்.

2. மேலும் He, She, It, You, They, We போன்றவற்றைப் பயன்படுத்தி வாக்கியங்கள் அமைத்துப் பயிற்சி செய்யுங்கள்.

3. அவற்றை கேள்வி பதிலாக மாற்றி எழுதியும் பேசியும் பயிற்சிப் பெறுங்கள். கேள்வி பதிலாக மாற்றிப் பயிற்சிப்பெறும் பொழுது நாம் இன்று கற்ற உதாரணங்களைக் கவனித்து பயிற்சி செய்யவும்.

4. கீழுள்ளவாறு நீண்ட சொற்தொடர்களாகவும் எழுதி பயிற்சி செய்யலாம்.

Good idea, I am going to bring some vine.
நல்ல யோசனை, நான் கொண்டுவரப்போகின்றேன் கொஞ்சம் திராட்சைப் (புளிக்கவைத்த) பழச்சாறு.

I think it is going to rain.
நான் நினைக்கிறேன் மழைப் பெய்யப்போகின்றது.

Look at this car! It is going to crash into the tree.
பார் அந்த மகிழூந்தை! அது மோதப்போகின்றது அந்த மரத்தினில்.

He is going to become a dentist when he grows up.
அவன் ஒரு பல்வைத்தியராகப்போகின்றான் அவன் வளர்ந்து பெரியவனாகும் பொழுது.

What are you going to do when you get your degree?
நீ என்ன செய்யப்போகின்றாய் உனது (பல்கலைக் கழகப்) பட்டம் பெறும் பொழுது?

What kind of jam are you going to make?
என்ன வகையான பழக்கூழ் நீ தயாரிக்கப்போகின்றாய்?

குறிப்பு -1:

1. நான் செய்யப் போகின்றேன், போகப்போகின்றேன், பாடப்போகின்றேன், பார்க்கப்போகின்றென் எனும் வார்த்தைகளைச் சற்று பாருங்கள். இவற்றில் “போகின்றேன்” எனும் ஒருச்சொல் இவ்வாக்கியங்களுடன் இணைந்து பயன்படுகின்றது. அதாவது ஒரு செயலை செய்ய எத்தனிக்கின்றேன், தயாராகின்றேன் அல்லது முயற்சிக்கின்றேன் எனும் அர்த்தங்களிலேயே அவை பயன்படுத்தப்பட்டுள்ளது.

தவிர சாதாரண நிகழ்கால வினையாகவோ, நிகழ்காலத் தொடர்வினையாகவோ பயன்படவில்லை என்பதை கவனிக்கவும்.

உதாரணம்:

I read a book.
நான் வாசிக்கின்றேன் ஒரு புத்தகம்.

I am reading a book.
நான் வாசித்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு புத்தகம்.

I am going to read a book.
நான் வாசிக்கப்போகின்றேன் ஒரு புத்தகம். (இவற்றைக் குழப்பிக்கொள்ளாதீர்கள்.)

குறிப்பு -2:

கீழுள்ள வாக்கியங்களில் "going to go" என்பதை "going" என்று மட்டுமே பயன்படுத்துவோரும் இருக்கின்றனர். (Going to go' can be shortened to 'going.) இவற்றை கவனித்தில் வைக்கவும்.

she is going to go to school. (She going to school)
அவள் போகப்போகின்றாள் பாடசாலைக்கு.

கவனிக்கவும்:

ஆங்கிலத் திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றில் "gonna" எனும் சொற்பதத்தை அடிக்கடி பலர் பேசுவதைக் கேட்டிருப்பீர்கள். இந்த “gonna” எனும் சொல் "going to" என்பதின் சுருக்கம் என்பதை நினைவில் கொள்க. இது அதிகமாக அமெரிக்க ஆங்கிலத்தில் பயன்படுகிறது. ('going to' is often shortened to 'gonna', especially in American English.)

உதாரணம்:

Are you going to go soon?

Are you gonna go soon?

வரைப்படம்


மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.

இன்றையப் பாடம் தொடர்பான சந்தேகங்கள் கேள்விகள் இருப்பின் வழமைப்போல் பின்னூட்டம் இட்டோ மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம்.

நன்றி

அன்புடன் ஆசிரியர் அருண் HK Arun

Download As PDF

21 comments:

Anonymous said...

நன்றி! அருண்

Unknown said...

உங்களது பாட வகுப்புகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கிறது. சில நாட்களுக்கு முந்தி தான் உங்களது வலைப்பதிவு எனக்கு தெரிய வந்தது. அடுத்தப் பாடத்தை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

நன்றி.


அன்புடன்,

முனவ்வர்

அமிர்தவர்ஷினி அம்மா said...

மிகவும் அருமையான முயற்சி. நான் தொடர்ந்து இதனை படித்து வருகிறேன். எனது பிள்ளைகளுக்கு இதிலிருந்துதான் மேற்கோள் காட்டுகிறேன். தொடர்ந்து எழுதவும். நன்றி

Anonymous said...

என்ன தோழரே அடுத்த பயிற்சி எப்பொழுது கொடுப்பதாக உத்தேசம்........

HK Arun said...

நன்றிகள் முனவ்வர், அமிர்தவர்சினி அம்மா, அபூ சமீர் மூவருக்கும்.

அடுத்த பாடம் எழுதிக்கொண்டிருக்கின்றேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

நன்றி

Anonymous said...

நல்ல முயற்சி. "போகின்றேன்" என்பதிற்கு பதிலாக "போகிறேன்" என்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

tomyfriends said...

Alhamdulillah.Arun sir what a good job you are doing..I'm feeling happy for your work..give more teachings like this...Thank you ARUN sir.

By Riyaz

HK Arun said...

-லெட்சுமணன்
போகின்றேன்/ போகிறேன்
இரண்டும் ஒரு பொருளுடையே தருவதாக அறிகிறேன்.

இரண்டு சொற்களுக்கும் இடையில் வேறுப்பாடு இருக்கின்றனவா தெரியவில்லை.

நன்றி

HK Arun said...

- Riyaz

உங்கள் மகிழ்வு எமக்கு மகிழ்வானதே! தொடர்ந்து பாடங்களை வழங்க முயற்சிக்கின்றேன்.

நன்றி

ramasamy said...

Dear Mr. arun,

athanks for your great help and it will help to generate my knowledge and can i get conversation with english tamil.

By Sasi

HK Arun said...

- ramasamy

உங்கள் கருத்துரைக்கு மகிழ்ச்சி!

நன்றி

venkatesan said...

hai arun!
This website opportunity for who are learning english.I also going to say about this website to my friends.
Thank you Arun.

HK Arun said...

-Iyyappan

நன்றி நண்பரே!

Anonymous said...

Hi arun
very nice your blog
I am happy
Thank you thank you very much sir

Anonymous said...

I am Padma,

i have one doubt, where did the shall will comes. plz clear me sir.

Vazhuthi said...

This is good

Vazhuthi said...

This is good. I learn more. Please continue. Thanks

Unknown said...

This is most useful website. I like it.
thanks for your service.

Mohamed said...

Everything is nice.You got it Mr.Arun

saritha said...

Hi arun sir
very useful ur blog.but few days ur blog pdf download block domain. this pdf save option tell me sir

Unknown said...

Hai sir, this website is very useful to me..I learned a lot through this website..I will be learing a lot..Thanku so much

Post a Comment