Wednesday, February 20, 2008

ஆங்கில பாடப் பயிற்சி 4 (Simple Present Tense)

நாம் Grammar Patterns 1, Grammar Patterns 2, Grammar Patters 3 என மூன்று பாடங்களிலும், ஒரு வார்த்தையை 73 விதமாக மாற்றி பயிற்சி செய்தோம். அந்த 73 வார்த்தைகளில் ஒவ்வொரு வார்த்தைகளும் ஒவ்வொரு பாடங்களாக விரிவடையும் என்று நாம் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். 

அதன்படி இன்று Grammar Patters 1 றின் முதலாவது வாக்கியமான "I do a job" எனும் வாக்கியத்தை விரிவாகவும் அதன் இலக்கண விதிமுறைகளையும் பார்க்கப் போகின்றோம்.

1. I do a job
நான் செய்கின்றேன் ஒரு வேலை.

இந்த "I do a job" எனும் வாக்கியம் ஒரு சாதாரண நிகழ்கால வாக்கியமாகும். இதை ஆங்கிலத்தில் Simple Present Tense அல்லது Present Simple Tense என்று அழைப்பர்.

இந்த "Simple Present Tense"" சாதாரண நிகழ்காலச் சொற்களை எப்படி கேள்வி பதிலாக மாற்றி அமைப்பது என்று பார்ப்போம். கீழே பாருங்கள்.

Subject + Auxiliary verb + Main verb
1. I/ You/ We/ They + __ + do a job.
2. He/ She/ It + __ + does a job. இவற்றில் "Subject" வாக்கியத்தின் முன்னால் வந்துள்ளது. இவ்வாக்கிய அமைப்புகளில் "Auxiliary verb" "அதாவது துணைவினை பயன்படுவதில்லை என்பதை கவனத்தில் கொள்க.

Auxiliary verb + Subject + Main verb
1. Do + I/ you/ we/ they + do a job?
2. Does + he/ she/ it + do a job.

இவற்றில் "Auxiliary verb" பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது சாதாரண நிகழ்காலக் கேள்வி வாக்கியங்களின் போது Do/ Does துணைவினை முன்பாகவும் "Subject" அதன் பின்னாலும் பயன்படும். இதை சற்று விளங்கிக்கொண்டோமானால் எந்த ஒரு வாக்கியத்தையும் மிக இலகுவாக கேள்வி பதிலாக மாற்றி அமைத்துவிடலாம்.

இப்பாடத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து கற்போம்.

கீழே சொடுக்கி ஒலி வடிவாகவும் கேட்கலாம்.

சாதரன நிகழ்காலம்.m...

பகுதி 1

Do you do a job?
நீ செய்கின்றாயா ஒரு வேலை?
Yes, I do a job
ஆம், நான் செய்கின்றேன் ஒரு வேலை.
No, I don’t do a job. (do + not)
இல்லை, நான் செய்கின்றேனில்லை ஒரு வேலை.

Do you speak in English?
நீ பேசுகின்றாயா அங்கிலத்தில்?
Yes, I speak in English.
ஆம், நான் பேசுகின்றேன் ஆங்கிலத்தில்
No, I don’t speak in English. (do + not)
இல்லை, நான் பேசுகின்றேனில்லை ஆங்கிலத்தில்.

Do you go to school?
நீ போகின்றாயா பாடசாலைக்கு?
Yes, I go to school.
ஆம், நான் போகின்றேன் பாடசாலைக்கு.
No, I don’t go to school. (do + not)
இல்லை, நான் போகின்றேனில்லை பாடசாலைக்கு.

மேலே I (நான்) என்று பயன்படுத்தப்பட்டிருக்கும் இடங்களிற்கு "You, We, They - நீ/ நாங்கள்/ நாம்/ அவர்கள்/அவைகள்" என்று மாற்றி பயிற்சி செய்துப் பாருங்கள்.

கீழே 50 வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பயிற்சி செய்யுங்கள். அதன் பின்பு நாம் மேலே கற்ற உதாரணங்களைப் பின்பற்றி கேள்வி பதில் வாக்கியங்கள் அமைத்து பயிற்சி செய்துப் பாருங்கள்.

1. I get up early at 6.30.
நான் எழுகின்றேன் அதிகாலை 6.30 அளவில்.

2. I brush my teeth.
நான் துலக்குகின்றேன் என் பற்களை.

3. I have a bath.
நான் குளிக்கின்றேன்.

4. I have my breakfast.
நான் எனது காலை உணவை உண்கின்றேன்.

5. I travel by bus.
நான் பிரயாணம் செய்கின்றேன் பேரூந்தில்.

6. I go to school.
நான் போகின்றேன் பாடசாலைக்கு.

7. I get down from the bus.
நான் இறங்குகின்றேன் பேரூந்திலிருந்து.

8. I read the book.
நான் வாசிக்கின்றேன் புத்தகம்.

9. I write an article.
நான் எழுதுகின்றேன் ஒரு கட்டுரை.

10. I get down meals from canteen.
நான் எடுபிக்கின்றேன் உணவு சிற்றுண்டி சாலையிலிருந்து.

11. I pay the loan.
நான் செலுத்துகின்றேன் கடன்.

12. I borrow some books from my friend.
நான் இரவல் வாங்குகின்றேன் புத்தகங்கள் எனது நண்பனிடமிருந்து.

13. I leave from class.
நான் வெளியேறுகின்றேன் வகுப்பிலிருந்து.

14. I try to go.
நான் முயற்சி செய்கின்றேன் போவதற்கு.

15. I have a rest.
நான் எடுக்கின்றேன் ஓய்வு.

16. I answer the phone.
நான் பதிலளிக்கின்றேன் தொலைப்பேசிக்கு.

17. I watch movie.
நான் பார்க்கின்றேன் திரைப்படம்.

18. I worry about that.
நான் கவலைப்படுகிறேன் அதைப் பற்றி.

19. I drive a car.
நான் ஓட்டுகின்றேன் ஒரு மகிழூந்து.

20. I read the news paper.
நான் வாசிக்கின்றேன் செய்தித் தாள்.

21. I play foot ball.
நான் விளையாடுகின்றேன் உதைப்பந்தாட்டம்.

22. I boil water.
நான் கொதிக்கவைக்கின்றேன் தண்ணீர்.

23. I have some tea.
நான் அருந்துகின்றேன் கொஞ்சம் தேனீர்.

24. I do my homework.
நான் செய்கின்றேன் எனது வீட்டுப்பாடம்.

25. I deposit money to the bank.
நான் வைப்பீடு செய்கின்றேன் காசை வங்கியில்.

26. I wait for you.
நான் காத்திருக்கின்றேன் உனக்காக.

27. I operate computer.
நான் இயக்குகின்றேன் கணனியை.

28. I follow a computer course.
நான் பின்தொடர்கின்றேன் ஒரு கணனிப் பாடப்பயிற்சி.

29. I practice my religion.
நான் பின்பற்றுகின்றேன் என் மதத்தை.

30. I listen to news.
நான் செவிமடுக்கின்றேன் செய்திகளுக்கு.

31. I speak in English.
நான் பேசுகின்றேன் ஆங்கிலத்தில்.

32. I prepare tea.
நான் தயாரிக்கின்றேன் தேனீர்.

33. I help to people.
நான் உதவுகின்றேன் மக்களுக்கு.

34. I celebrate my birthday.
நான் கொண்டாடுகின்றேன் எனது பிறந்த நாளை.

35. I enjoy Tamil songs.
நான் இரசிக்கின்றேன் தமிழ் பாடல்களை.

36. I negotiate my salary.
நான் பேரம்பேசுகின்றேன் எனது சம்பளத்தை.

37. I change my clothes.
நான் மாற்றுகின்றேன் எனது உடைகளை.

38. I go to market.
நான் போகின்றேன் சந்தைக்கு.

39. I choose a nice shirt.
நான் தெரிவுசெய்கின்றேன் ஒரு அழகான சட்டை.

40. I buy a trouser.
நான் வாங்குகின்றேன் ஒரு காற்சட்டை.

41. I love to Tamileelam.
நான் நேசிக்கின்றேன் தமிழீழத்தை.

42. I remember this place.
நான் நினைவில் வைத்துக்கொள்கின்றேன் இந்த இடத்தை.

43. I take a transfer.
நான் எடுக்(பெறு)கின்றேன் ஒரு இடமாற்றம்.

44. I renovate the house.
நான் புதுபிக்கின்றேன் வீட்டை.

45. I give up this habit.
நான் விட்டுவிடுகின்றேன் இந்த (தீய)பழக்கத்தை.

46. I fly to America.
நான் பறக்கின்றேன் (விமானத்தில்) அமெரிக்காவிற்கு.

47. I solve my problems.
நான் தீர்க்கின்றேன் எனது பிரச்சினைகளை.

48. I improve my English knowledge.
நான் விருத்திச்செய்கின்றேன் எனது ஆங்கில அறிவை.

49. I practice English at night.
நான் பயிற்சி செய்கின்றேன் ஆங்கிலம் இரவில்.

50. I dream about my bright future.
நான் கனவு காண்கின்றேன் எனது பிரகாசமான எதிர்காலத்தை (பற்றி).

பகுதி 2:

மேலே "பகுதி 1" ல் உள்ள 50 வாக்கியங்களையும் கேள்வி பதிலுமாக மாற்றி பயிற்சி செய்யும் படி கூறியிருந்தேன். இப்பொழுது அதே 50 வாக்கியங்களையும் He / She / It போன்ற சொற்களைப் பயன்படுத்தி கேள்வி பதில்களாக அமைத்து பயிற்சி செய்துப் பாருங்கள்.

கவனிக்கவும்:

சாதாரண நிகழ்காலத்தில் He/ She/ It போன்ற "Third Person Singular" வாக்கியங்களின் போது எப்பொழுதும் பிரதான வினை சொல்லுடன் s, es  போன்ற எழுத்துக்களை இணைத்தே பயன்படுத்த வேண்டும்.

ஒரு முறை He/ She/ It Infinitive + e, es அட்டவணையைப் பார்த்துக்கொள்ளவும்.

Grammar Patterns 2 ல் முதலாவது வார்த்தை எவ்வாறு எழுதப்பட்டிருக்கின்றது என்பதனைப் பார்த்தும் அறிந்துக்கொள்ளலாம்.

மேலும் சில உதாரணங்கள்:

He does a job. - அவன் செய்கின்றான் ஒரு வேலை.
She does a job. - அவள் செய்கின்றாள் ஒரு வேலை.
It does a job. - அது செய்கின்றது ஒரு வேலை.

He speaks in English - அவன் பேசுகின்றான் ஆங்கிலத்தில்.
She speaks in English. - அவள் பேசுகின்றாள் ஆங்கிலத்தில்.
It speaks in English. - அது பேசுகின்றது ஆங்கிலத்தில்.

இப்பொழுது "Third Person Singular" வாக்கிய அமைப்புக்களை எவ்வாறு கேள்வியாக மாற்றி அமைப்பது என்பதனைப் பார்ப்போம்.

Auxiliary verb + Subject + Main verb
2. Does + he/ she/ it + do a job. இவற்றில் "Auxiliary verb" அதாவது துணைவினை 'Does' வாக்கியத்தின் ஆரம்பத்திலும் "Subject" அதன் பின்னாலும் அமைந்துள்ளதை அவதானியுங்கள்.

Does he do a job?
அவன் செய்கின்றானா ஒரு வேலை?
Yes, he does a job
ஆம், அவன் செய்கின்றான் ஒரு வேலை.
No, he doesn’t do a job. (does + not)
இல்லை, அவன் செய்கின்றானில்லை இரு வேலை.

Does he speak in English?
அவன் பேசுகின்றானா அங்கிலத்தில்?
Yes, he speaks in English.
ஆம், அவன் பேசுகின்றான் ஆங்கிலத்தில்
No, he doesn’t speak in English. (does + not)
இல்லை, அவன் பேசுகின்றானில்லை ஆங்கிலத்தில்.

Does she go to school?
அவள் போகின்றாளா பாடசாலைக்கு?
Yes, she goes to school.
ஆம், அவள் போகின்றாள் பாடசாலைக்கு.
No, she doesn’t go to school. (does + not)
இல்லை, அவள் போகின்றாளில்லை பாடசாலைக்கு.

குறிப்பு:

He - அவன்

'அவன்' எனும் சுட்டுப்பெயருக்குப் பதிலாக ஆண்களின் பெயர்களையும்

She - அவள்

'அவள்' எனும் சுட்டுப்பெயருக்குப் பதிலாக பெண்களின் பெயர்களையும்

It - அது

'அது' எனும் சுட்டுப்பெயருக்குப் பதிலாக பிற பொதுவானப் பெயர்களையும் பயன்படுத்தலாம்.

உதாரணம்:

He/ She/ It - makes a coffee - (make)
He/ She/ It - thinks about that (think)
He/ She/ It - loves to Motherland (love)

Suvethine makes a coffee. - சுவேதினி தயாரிக்கிறாள் ஒரு கோப்பி.

Sarmilan loves to Motherland. - சர்மிலன் நேசிக்கின்றான் தாயகத்தை.

Cat thinks about that. - பூனை நினைக்கின்றது அதைப்பற்றி.

விதிமுறைகள்

வினைச் சொற்களின் கடைசி எழுத்து “y” ல் முடிவடைந்திருந்தால் அதனுடன் “ies” இணைத்துக்கொள்ள வேண்டும். (விதி விலக்கானவைகளும் உண்டு)

உதாரணம்:

Try - tries
Worry - worries

அதேப்போன்று “s”, x”, z”, ch”, sh”, 0" போன்ற எழுத்துக்கள் வினைச் சொல்லின் கடைசியாக வந்திருந்தால் அதனுடன் “es” இணைத்துக்கொள்ள வேண்டும்.

உதாரணம்:

do - does
go - goes
have - has ('have' என்பதற்கு 'has' என முழுச்சொல்லையே மாற்றிப் பயன்படுத்த வேண்டும்.)

குறிச்சொற்கள்

நிகழ்கால வினைச் சொற்களுடன் பயன்படும் சில குறிச் சொற்கள் [Simple Present - Signal words]

always
Often
Usually
Sometimes
Seldom
Never
Every day
Every week
Every year
On Monday
After school

உதாரணமாக ஒரு நண்பர் அல்லது உறவினர் உங்களிடம் " நீ எங்கே வசிக்கிறாய்?" என்று கேட்கிறார் என வைத்துக்கொள்வோம். இதை சற்று கூர்ந்துக் கவனியுங்கள்.

Where do you live?
எங்கே நீ வசிகின்றாய்?

I live in Hong Kong.
நான் வசிக்கின்றேன் ஹொங்கொங்கில்.

இதில் நீங்கள் "நான் வசிக்கின்றேன் ஹொங்கொங்கில்" என்று சாதாரண நிகழ்காலத்தில் பதிலளித்துள்ளீர்கள். இதில் இந்த நிகழ்காலச் சொல் ஒரு வரையரைக்குள் உற்படாமல் இருப்பதை அவதானிக்கலாம். அதாவது நேற்றும் ஹொங்கொங்கில் வசித்துள்ளீர்கள். இன்றும் ஹொங்கொங்கில் வசிக்கின்றீர்கள். நாளையும் ஹொங்கொங்கில் வசிக்கலாம். எனவே உங்கள் பதில் " நான் வசிக்கிறேன் ஹொங்கொங்கில்" என்று பொதுப்படையாகக் கூறுப்படுகின்றது என்பதை கருத்தில் கொள்க.

இதுப்போன்ற சந்தர்பங்களில் "செயல்" குறிப்பாக ஒரு காலத்தை மட்டும் குறித்து காட்டுவது போன்று அல்லாமல் முக்காலத்தையுமே குறித்த சாதாரண நிகழ்வாகவே பயன்படுகிறது. இதனையே "Simple Present tense" என்று அழைக்கப்படுகின்றது. கீழே "வரைப்படம் 1" றைக் கவனியுங்கள்.

வரைப்படம் 1

வரைப்படம் - 2 ல் காட்டப்பட்டுள்ளவாறு, ஒரு குறிப்பிட்ட வரையரைக்குள் உற்படுத்திய நிகழ்காலத்தை குறிக்கும் விதமாகவும் பயன்படும்.

வரைப்படம் 2

சரி! இனி உங்கள் பயிற்சிகளை தொடருங்கள்.

இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எனது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளுங்கள்.

நன்றி.
அன்புடன் ஆசிரியர் அருண் HK Arun

6 comments:

கருப்பன்/Karuppan said...

நல்ல தொடர் என் தம்பிக்கு ரெக்கமன்ட் பண்ணியிருக்கிறேன்.

Arun said...

நன்றி

கருப்பன் அவர்களுக்கு

Anonymous said...

It is realy excelent you are so helpfull us

Thanks
Syed
Dubai

ஆதிநாராயணன் said...

I am new to learn the English. Can u guide me for the learning of English.
I am having the following doubts,
You are mentioning the Question
1. Do you speak in English?
Yes i speak in English
Same way how i do a framing a questions for we/i/he/she/it/they.

Do he speak in english?
Yes he speak in english

Do we speak in english?
Yes we speak in english.

Do they speak in english?
Yes they speak in english.

Do it speak in english?
Yes it speak in englsh.

Do she speak in english?
Yes she speak in english.

HK Arun said...

அன்புடன் ஆதிநாரயணன்.

I
You
We
they
இவற்றின் கேள்வி வாக்கியங்களின் போது “Do” பயன்படுத்த வேண்டும்.

He
She
It
இவற்றின் பொழுது “Does” பயன்படுத்த வேண்டும்.

பாடத்தில் தெளிவாக காட்டப்பட்டுள்ளதே! திரும்பவும் பாருங்கள் விளங்கிக்கொள்ளலாம்.

நன்றி

ஆதிநாராயணன் said...

Ok thanks Arun.k I understood. I missed out.

பதிப்புரிமை © 2007-2009 ஆங்கிலம்.ப்ளொக்.கொம்
எமது ஆங்கிலம் வலைத்தளத்தின் பாடப் பயிற்சிகளை பத்திரிக்கைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள், வலைப்பதிவுகள், கருத்துக்களங்கள், மன்றங்கள் போன்றவற்றில் மீள்பதிவிடுவதாயின் தயவு செய்து எமது வலைத்தளத்தின் பெயரை aangilam.blogspot.com கட்டாயம் குறிப்பிட்டே மீள்பதிவிட வேண்டும். அவ்வாறு மீள்பதிவிடுவோர் எமது மின்னஞ்சல் முகவரியூடாகவோ arunhk.info AT gmail.com அல்லது குறிப்பிட்ட பாடத்தின் பின்னூட்டமாகவோ அறியத் தர வேண்டும்.
இப்பாடங்கள் பலருக்கும் பயன்பட வேண்டும் எனும் நன்நோக்குடன் நீங்கள் மீள்பதிவிடுபவராக இருக்கலாம் அவ்வாறாயின், பாடங்களின் ஒரு பகுதியை மட்டும் இட்டு, எமது தளத்திற்கு இணைப்பு வழங்குங்கள். தயவு செய்து முழுப் பாடங்களையும் அப்படியே வெட்டி ஒட்டுவதைத் தவிர்க்கவும். நன்றி.