ஆங்கில உச்சரிப்புப் பயிற்சி (Pronunciations)

ஆங்கில மொழி கற்கும் நாம், ஆங்கிலம் பேசும் பொழுது ஆங்கில உச்சரிப்புக்களை சரியாக உச்சரிக்க வேண்டும் எனும் எதிர்ப்பார்ப்பு பொதுவாக அனைவரிடமும் காணப்படுவதுதான். அதற்கு ஆங்கில சொற்களின் ஒலிப்பை துல்லியமாக கற்பிப்போரைப் பின்பற்றியே பயிலவேண்டும்.

தாய்மொழி ஆங்கிலேயரின், ஆங்கில மொழி கல்வி கூடங்களில், ஆரம்பக் கல்வி முதலே உச்சரிப்பு பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கற்பிக்கப்படுகின்றது. சிலவேளை உங்களில் யாரேனும் ஒருவர் ஆங்கில இலக்கணம் கற்றும், சரியான ஆங்கில உச்சரிப்பைப் பெறமுடியாது போயிருந்தால் அதற்கான காரணம், நீங்கள் ஆங்கிலம் கற்ற கல்வி கூடங்களும், உங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களுமே ஆகும்.

அவ்வாறு ஆங்கில மொழியை ஒலிப்புத் துல்லியத்துடன் பேசமுடியாதவர்கள் அல்லது பேசவிரும்புவோர் இதோ இந்த இணைப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஒவ்வொரு சொல்லையும் எவ்வாறு உச்சரிக்கவேண்டும், ஒலிப்புக்களின் போது ஏற்ற இறக்கங்கள் எவ்வாறு அமையவேண்டும் என்பதனையும் இக்காணொளிகள் தெளிவாக்குகின்றன.

உதட்டசைவு
பல்லசைவு
தாடையசைவு
நாக்கசைவு
முகத்தசைகளின் அசைவு

என ஒவ்வொன்றின் அசைவுகளுடன் ஒவ்வொரு சொல்லும் எவ்வாறு உச்சரிக்கப்பட வேண்டும் என அழகாக உச்சரித்துக்காட்டப்படுகின்றது.

எடுத்துக்காட்டாக இக்காணொளியைப் பாருங்கள்



இந்தக் காணொளியை ஒரு எடுத்துக்காட்டிற்காகவே இங்கு இட்டுள்ளேன். இதைப்போன்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சொற்களை Daily Pronunciation என ஆங்கில உச்சரிப்புக்களை இத்தளத்தில் பயிற்றுவிக்கின்றனர். A-Z ஆங்கில அகரவரிசையில் சொற்களை நீங்கள் பயிற்சி செய்துப் பழகலாம்.

விவாதங்களும் வேண்டுகோளும்

தமிழர்களான நாம் இந்தியர் பேசுவதுதான் சரியான ஆங்கில உச்சரிப்பு என்றும், இலங்கையர் பேசுவதுதான் சரியான ஆங்கில உச்சரிப்பு என்றும் ஆங்காங்கே சில விவாதங்கள் இணையத்தில் காணப்படுகின்றது.

தமிழர்களான நம்மிடையே, தமிழகத் தமிழர்களில் பலருக்கு ல, ள ஒலிப்புகளை துல்லியமாக ஒலிக்க முடிவதில்லை. ஈழத்தமிழர்கள் பலருக்கு “ழ” ஒலிப்பு வருவதில்லை எனும் விவாதங்களும் உள்ளன. இதில் யார் பேசுவது சரியென்று நான் கருத்தாட வரவில்லை.

"டகர ஒற்று எப்பொழுதும் வல்லினம். அதனை retroflex T ஆகத்தான் ஒலித்தல் வேண்டும். ஒவ்வொருவரும் தமிழை இப்படித் திரித்துக்கொண்டே போனால், தமிழ் ஒலிப்பு குட்டிசுவராகிவிடும்."

"தமிழ் ஒலிப்பொழுக்கம் நிறைந்த மொழி. இடத்துக்கு இடம் மாறான ஒலிப்புகள் (சீர் இல்லாமல்) வருவது கிடையாது. ஆங்கிலத்தில் அப்படி இல்லை."

"பயிலும் மாணவ/மாணவிகளும் எழுதுவதிலும் படிப்பதிலும் தேர்ந்துவிடுகின்றனர். ஆயினும் பேச்சுத் தமிழில் தடுமாறவே செய்கின்றனர்.

தமிழ் நடை, தமிழ்நாட்டிலேயே ஒருமுறை சீரழிந்து மணிப்பவளம் பெருகி, இப்பொழுது மீண்டும் இருபதாம் நூற்றாண்டில் உயிர்பெற்று வந்திருக்கிறோம். மீண்டும் ஒருமுறை அது அழிய வேண்டாம். நம் வீட்டை நாம் காப்பாற்றாமல், இன்னொருவரா காப்பாற்றுவார்?"


இதுப்போன்ற தமிழ்பற்றாலர்களின் அங்கலாய்ப்புகளும், தமிழ்மொழி வல்லுநர்கள் இடையேயான கருத்து முரண்பாடுகளும் நிறையவே இருக்கின்றன. இன்னும் கூறப்போனால் சரியான தமிழ் ஒலிப்புத் துல்லியம் என்பது ஒரு சில தமிழ்மொழி வல்லுனர்கள், முனைவர்கள், கவிஞர்கள் என ஒரு வரையரைக்குள்ளேயே இருப்பதாகவே நான் உணர்கின்றேன். அல்லது அவர்களிடமும் முறையான ஒரு முறைமை இல்லை என்றும் படுகின்றது. இவை இன்னும் எத்தனை தலைமுறைக்கு இப்படியே தொடர்ப்போகின்றது என்பதே பிரதானக் கேள்வியாகும்.

இவ்வாறான நிலையில் எம் தாய் மொழியான, தமிழ் மொழியையே நாம் சரியாக உச்சரிக்கின்றோமா? எமது தமிழ் ஒலிப்பில் ஒருமித்த ஒரு பொதுக்கருத்து நிலவுகின்றதா? என்பது தொடர்பில் பலக்கேள்விகள் எனக்குள்ளன.

அதற்கு என்ன செய்யலாம்?

உலகெங்கும் பரந்து வாழ் தமிழறிஞர்கள் தமிழ் ஒலிப்பு முறைகளில் முக்கிய கவனம் செலுத்தவேண்டும். அத்துடன் ஆரம்ப பாடசாலை முதல், தமிழ் உச்சரிப்புக்கள் தொடர்பில் ஒருமித்ததும் சரியானதுமான பயிற்சிமுறைகளை முன்வைக்க வேண்டும். தமிழ் மென்பொருளாலர்கள் அதற்கான மென்பொருள்களை உருவாக்கலாம்.

மேலே ஆங்கில சொற்களின் உச்சரிப்புக்கள் தொடர்பான இணையத்தளத்தைப் போன்று, தமிழ் சொற்களில் உச்சரிப்பதற்கு கடினமான ல, ள, ழ வேறுப்பாடுகளை, ன, ண, வேறுப்பாடுகளை, ர, ற வேறுப்பாடுகளை துல்லியமாக எல்லோரும் பெறுவதற்கான உச்சரிப்பு பயிற்சி முறைகள் உருவாக்கப்படவேண்டும். தமிழ் மொழி பாடசாலைகளில் ஆரம்பக் கல்வி முதலே அது நடைமுறைக்கு வரவேண்டும். சம்பந்தப்பட்டோர் இதற்கான முயற்சிகளில் இறங்கினால் அனைத்து தமிழர்களும் பயனடையலாம்.

குறைந்தப் பட்சம் தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொன்றினதும் ஒலிப்புத் துல்லியம் பெறுவதற்கான "உச்சரிப்பு பயிற்சி" காணொளி கோப்புக்களையாவது உருவாக்கி பதிவேற்ற வேண்டும் என வேண்டுகின்றேன்.

எதிர்ப்பார்ப்புகளுடன்...

நன்றி!

அன்புடன்
அருண் HK Arun Download As PDF

15 comments:

கண்ணா.. said...

நல்ல பயனுள்ள பதிவு நண்பரே..

தொகுத்து வழங்கியதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

முக்கோணம் said...

Good post..keep it up..!

HK Arun said...

நன்றி முக்கோணம்

நாகராஜன் said...

அருமையான பதிவு அருண்... நீங்கள் கூறியது போல் தமிழ் எழுத்துகளின் உச்சரிப்புக்கான காணொளி இருந்தால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.

HK Arun said...

//நீங்கள் கூறியது போல் தமிழ் எழுத்துகளின் உச்சரிப்புக்கான காணொளி இருந்தால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.//

ஆம்! அதுதான் எமது எதிர்ப்பார்ப்பும்.

காலக்காலமாக, தலைமுறை தலைமுறையாக எம் தாய் தமிழையே எமக்கு சரியாக உச்சரிக்கத்தெரியாத கேவலமான நிலையிலேயே உள்ளோம்.

ஒருவருக்கு ஒருவர் அடுத்தவரின் ஒலிப்புக்களை நகைப்பதும், தாமே சரியாக உச்சரிப்பவர்கள் எனும் மனநிலை கொண்டவர்களாகவுமே இருக்கின்றோம்.

ஆனால், தமிழறிஞர்களும், கவிஞர்களும், தமிழ்பற்றாளர்களும் தமக்குள் தாமே அது சரி, இது சரி, இச்சொல் இப்படி உச்சரிக்க வேண்டும், அச்சொலை அப்படி உச்சரிப்பது பிழை எனும் வாக்குவாதங்களே தொடர்கின்றன. இவ் வாக்குவாதங்கள் இணையத்தளங்கள், வலைப்பதிவுகள், மன்றங்கள், குழுமங்கள், விக்கிப்பீடியா உட்பட அனைத்து தளங்களிலும் காணப்படுகின்றன.

இவ்வாறான நிலையில் சாதாரண ஒரு தமிழன் அல்லது தமிழ் மாணவனின் தமிழ்மொழி உச்சரிப்பு எத்தனை துல்லியமாக இருக்க வாய்ப்புள்ளது?

யாழ்ப்பாணத்தமிழ், மட்டக்களப்புத் தமிழ், மலையகத் தமிழ், சென்னைத் தமிழ், கொங்குத் தமிழ், மதுரைத் தமிழ் என இன்னும் எத்தனையோ வட்டார வழக்குகள் இருக்கின்றன. அது வேறுவிடயம். ஆனால் தமிழனாகப் பிறந்து ஒவ்வொருவனும் தமிழ் சொற்களை எவ்வாறு ஒலிக்க வேண்டும் எனும் பொது கருத்து நிலவவேண்டும். எவ்வாறு ஒலிப்பது சரியானது என்பதாவது எல்லாத்தமிழரும் தெரிந்திருக்க வேண்டும்.

இது தமிழரிஞர்கள் என கூறிக்கொள்வோரின் விவாதப் பொருளாக மட்டுமே தொடர்ந்து இருக்கக்கூடாது.

இதற்கு சாத்தியமான வழிகள் நிறையவே உள்ளன.

1. மேலே சுட்டிக்காட்டியப் படி சரியாக உச்சரிக்க முடிந்தவர்கள், காணொளி கோப்புக்களை உருவாக்கி பதிவேற்றி விடலாம்.

2. சரியான ஒலிப்புத் தொடர்பான மென்பொருளை உருவாக்கி இணையத்தளங்களில் பலரும் பயனடைய வழிவகுக்கலாம்.

3. எமது எதிர்கால சந்ததியினர் தமிழை பிழையின்றி ஒலிக்க, தமிழ் ஒலிப்புக்கள் குறித்து பாடத்திட்டங்களை வடிவமைக்கலாம்.

குறைந்தப்பட்சம் ர, ற, ன, ண, ழ, ல, ள எழுத்துக்களின் ஒலிப்பு வேறுப்பாடுகளையாவது எல்லோரும் சரியாக உச்சரித்துப் பழக சம்பந்தப்பட்டோர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Sowbakya said...

Really it is very very Good. Thanks a lot. Now a days i speak very confidently. All the credit goes to this website.Once again "THANKS A LOT".

HK Arun said...

- Sowbakya

நன்றி

HK Arun said...

-நன்றி Kripa

தகவலுக்கு நன்றி. எமது வலைத்தளப் பதிவுகளையும் இணைத்துவிடுகின்றேன்.

நன்றி

velmurugaa.com said...

arumai

velmurugaa.com said...

arumai

siva said...

Valaga HK ARUN SIR.............

LOVE EARTH said...

ungaludaiya intha sevai thodara valthukkal ARUN sir... :)
-selvaraj

Unknown said...

மிகவும் நன்மையான விடயம் உபயோகமாக உள்ளது

Unknown said...

மிகவும் நன்மையான விடயம் உபயோகமாக உள்ளது

Unknown said...

really super...lot of thanks for post...

Post a Comment